பக்கம்:சைவமும் தமிழும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠱葯部 gu 忽鲁影 பயன் தரும் என்று கருதுதல் தி ைது என்பதை நீ அறிவாய், வினைகள் பின் முன்னாகப் பயனைத் தருதலுக்கு இந்த எடுத்துக்காட்டால் விளக்குவர் சிவப்பிரகாச ஆசிரியர். உயிர்களால் இயற்றப்படும் வினை அறிவுடையதன்று: அஃது அறிவில்லாத சடம் ஆதலின் அதனால் தன்னைச் செய்தவனைச் சென்று பற்ற இயலாது. அஃது எங்கோ ஒர் இடத்தில் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒர் உடம்பு கொண்டு செய்யப்படுகின்றது. செய்யப்பெற்ற செயல் அப்பொழுது நிகழ்ந்து அழிந்துவிடுகின்றது. ஆதலால் அது பின்னர் என்றாவது, எங்காவது, எந்த உடம்பிலாவது பயன் தர இயலாது. அதனால், இறைவனே அவரவர் செய்யும் வினையை நடுவனாய் நின்று அவ்வவ்வினைக் குரிய பயனை உரிய காலத்தில், உரிய இடத்தில், உரிய உடம்பில், கூட்டுவிப்பான். இதற்குக் காரணம் இறைவன் அவ்வினையைச் செய்யும் ஆருயிர்கள் மீதுள்ள அளவற்ற கருணையே யாகும் என்பதை அறிக. இதனைச் சித்தாந்த ஆறையில் மேலும் தெளிவாக்கு வேன். இறைவன் உயிர்கட்கு வினைப்பயனை ஊட்டு வித்ததற்குக் காரணம் அன்விகளைப் பிணித்துள்ள ஆணவ: மலத்தைப் போக்குதல் வேண்டும் என்னும் திருவுள்ளக் கருத்தேயாகும் என்பதை அறிக. உயிர்கள் எல்லா வற்றிற்கும் இறைவனே முதல்வன்' என்பதை மறந்து "எல்லாவற்றிற்கும் தாங்களே முதல்வர்” என்று எண்ணும் செருக்கினால் செய்யப்பெறும் செயல்களே வினை’ எனப் படுவன என்பதையும், இம் மறதியும் செருக்கும் ஆணவமல் மறைப்பினால் வருவன என்பதையும் இதுகாறும் எழுதி புள்ள கடிதங்களில் ஆங்காங்கு விளக்கியுள்ளேன், வினையை உயிர்கள் தவறாது அநுபவிக்க அநுபவிக்க அவை தமது அறியாமை நீங்கி இறைவனை அறியும் அறிவைப் பெறும். இறைவன் வினைப் பயனை ஊட் வித்தல் மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்தல் சை. க. வி.-14 . .