பக்கம்:சைவமும் தமிழும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器被联 சைவ சமய விளக்கு போன்றது. ஆணவமலம் உயிர்கட்கு உள் ள நோய் ஆகும். அதற்கு மருந்தாய் உள்ளவை வினைப் பயன்கள். மருந்துகளில் சில இனிக்கும்; சில கசக்கும், நீல்வினைப் பயனாகிய இன்பம் இனிப்பான மருந்தை உண்பது போன்றது; திவினைப் பயனாகிய துன்பம் கசப்பான மருந்தை உண்பது போன்றது. இன்னும் சில வேளைகளில் அறுத்துக் கீறிச் சுட்டுச் செய்யும் சிகிச்சைகளும் நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன அல்லவா? இங்கணமே மிகப் பெரிய துன்பங்களையும் மிகப் பெரிய பயனாக இறைவன் ஊட்டுவிப்கான், ஆருயிர்கள் இவற்றைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இது கருதியே வள்ளுவர் பெருமானும் 'இடுக்கண் வருங்கால் நகுக’** என்று கூறியபோந்தார் என்பதையும் நினைக்கத்தோன்று கின்றதல்லவா? சுருங்கக் கூறின, ஆருயிர்களின் மீது எல்லையற்ற கருணையையுடைய இறைவன் ஆணவத்தின் ஆற்றல் கெடுதற் பொருட்டே வினையின் பயனை ஊட்டு விப்பான் என்பதை உணர்க. - கன் றாங்கால் கல்லலாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?" என்ற குறள் உன் சிந்தனைக்கு விருந்தாக அமையட்டும். ஒரு பிறப்பில் செய்தி வினை முழுவதையும் ஒருவர் அடுத்த பிறப்பில் அது வித்துவிடுதல் இல்லை. ஒவ் வொரு பிறவியிலும் பிராரத்தாய் அதுபவிக்கும் வினை குறைவு; ஆகா மியமாய்ச் செய்யப்பெறும் வினை மிகுதி. இங்ஙனம் பிறவிதோறும் அதுபவிக்கப பெறாமல் சஞ்சித மாய்க் கிடக்கும் வினைத் தொகுதியை நினைத்துப் பார்க்க; அது பேரளவில் தேங்கிக் கிடப்பது புலனாகும். ஆகவே, பிராரத்தமாய்க் கழியும்பொழுது, அதன் அழி 率5. @ぶcmーをあ認 46. H. 379