பக்கம்:சைவமும் தமிழும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4சு இயல் 2i i வில் ஆகாமியம் தோன்றிவிடும் என்பது தெளிவாகின்றது. அஃதாவது, ஒரு வினை நசிக்கும்பொழுதே பல வினை உற்பத்தியாகிவிடுகின்றது என்பது தெளிவு. இக் காரணத்தால் காரிய கன்மம் நாசோற்பத்தி உடையது என்று கூறப்படும். நாசோற்பத்தி’ என்பது ஒருவினை நாசமாகும்பொழுது வேறு வினைகள் தோன்றுதல், இன்னும் காரிய கன்மம் நீரோட்டம்போல் இடையறாது வருதலின், அது பிரவாககித்தம் என்றும் வழங்கப்பெறும். வினை நாசத்தில் உற்பத்தியாய்த் தொடர்ந்து வருதலை அருணந்தி சிவம், வேலைக்கு வித்து மாகி விளைந்தவை பயனு மாகி ஞாலத்து வருமா போல காம்செயும் வினைகளெல்லாம் ஏலத்தான் பலமாச் செய்யும் இதம்அகி தங்கட் கெல்லாம் மூலத்த தாகி என்றும் வந்திடும் முறைமை யோடே." என்ற செய்யுளால் விளக்குவர். ஒர் உழவன் செய்த பயிர் தன் பயனைக் கொடுக்குங் காலத்தில் அஃது அவனுக்கு உணவாய்ப் பயன்படுதலேயன்றி அடுத்த ஆண்டிற்கு விதையாகவும் அமைகின்ற தல்லவா? இந்த உவமை கொண்டு நாசோற்பத்தி’க் கருத்தைத் தெளிக. - வினை இவ்வாறு நாசோற்பத்தி பண்ணி வருமாயின், உயிர் வினையினின்றும் நீங்கு தற்கு வழியே இல்லையா? என்று வினவலாம். கூறுவேன்; ஆகாமியம் இல்லாமல் பிராரத்தத்தை அநுபவித்தல், இயலாது. இஃது உண் 47. சித்தியார் 2. 12