பக்கம்:சைவமும் தமிழும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுே இயல் 했 பத்தி'யாதல் இல்லை. ஆகவே, உயிர்கட்கு இவ்வாற்றால் வினைத் தொடர்பு நீங்குதலும் உண்டு என்று தெளிக. வினையின் பயனைக் கூட்டுவிப்பவன் இறைவன். இதனை மணிவாசகப் பெருமான், முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருனை யாளன் வருக்துயரம் தீர்க்கும் மருந்து. (முன்னைவினை இரண்டு-சஞ்சிதம், பிராரத்தம்; முன்னின்றான்-குருவாக நின்றான்; வருந் துயரம்-ஆகாமிய வினையாகிய துன்பம்) என்று கூறியதனால் (திருவா. திருவெண்பா-கி) தெளிய லாம். ஒருவர் பிறரது தீவினைப் பயனைத் தாம் ஏற்றுக் கொள்ள விரும்பினும், தாம் செய்த நல்வினைப் பயனைப் பிறர்க்குத் தர விரும்பினும் இறைவனது ஆணை அவற்றை முற்றுவிக்கும் என்று அறிக. -. இறுதியாக வினைப்பற்றி ஒரு முக்கியமான கருதி தினைக் கூறுவேன். உயிர்கட்கு வினைக்கீடான உடம்பே கொடுக்கப்படும்’ என்பதில் உடம்பு’ என்பது பரு உடம்பையே (தாஸ்தேகம் குறிக்கும். பரு உடம்பு கண்ணுக்குப் புலனாவது, இத்த உடம்பில்தான் மக்கள், விலங்கு, பறவை, தாவரம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. இந்தப் பருவுடம்பிற்கு வேறாய் நுண்ணுடம்பு (சூக்கும தேகம் ஒன்று உண்டு; அது கண்ணுக்குப் புலனா காது. இதன் கண் அவ்வேறுபாடுகள் இல்லை. ஆகவே, வினைக் கேற்ப உயர்ந்ததும் தாழ்ந்ததுமாகக் கொடுக்கப் படும் உடம்புகள் என்பன பருவுடம்புகளேயாகும்