பக்கம்:சைவமும் தமிழும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝鳍驾 சைவ சமய விளக்கு என்பதை அறிக. ஆணவமலத்தால் கட்டுண்டு கேவல நிலையில் கிடக்கும் ஆண்மாக்கட்கு இறைவன் முதற் கண் நுண்ணுடம்பையே கூட்டுவிப்பான். இதில் உயர்வு தாழ்வு இல்லை. நுண்ணுடம்பினால் சிறிது அறிவும், இச்சையும் செயலும் விளங்கப்பெற்ற ஆன்மாக்கள் தத்தம் தகுதி திலைக்கேற்ப நல்லனவும் தீயனவுமான செயல்களை அளித்தும், இச்சித்தும் செய்ய முயலும். இம் முயற்சியே அவற்றிற்கு வினையாய் அமையும். அவ்வினைக்கேற்ற பருவுடம்பை இறைவன் அவற்றிற்குக் கூட்டுவிப்பான். அதன் பின்னர் காரணகாரியத் தொடர்பாய் பிறப்புகள் தொடர்ந்து நிகழும். பருவு-ம்பு, நுண்ணுடம்பு முதலிய வற்றின் இயல்புகளை அடுத்து வரும் கடிதங்களில் தெளிவாக விளக்குவேன். முதற்கண் துண்ணுடம்பு வரும்பொழுது ஒவ்வோர் ஆன்மாவும் தன் தன் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொன்றையும் இச்சிக்கும்-விரும்பும்-என்று கூறினேன் அல்லவா? இத் தகுதி இன்னதென்பதை விளக்குவேன். உயிர்கள் துல அறிவை உடையன என்பது அனைத்திற்கும் பொதுத் தன்மையாகும். ஆயினும் அத் தூல அறிவும் உயிர் தோறும் வேறு வேறாகவே அமைந்துள்ளது. இந்த வேறு பாடே அவற்றின் சிறப்பியல்பு ஆகும். இச்சிறப்பியல்பிற் கேற்ப ஆணவமலப் பிணிப்பும் உயிர்தோறும் வேறு வேறு வகையாகவே அமைந்துள்ளது. எல்லா உயிர்களும் ஒரு காலத்தில் வீடுபேறு அடையாமல் வேறு வேறு காலத்தில் அதனை அடைவதற்கும், விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் பிரிவுகட்கும் ஆணவமலப் பிணிப்பின் வேறுபாடேயாகும். விஞ்ஞானகலர் முதலிய ஒவ்வொன் றிலும் உள்ள உயிர்களிலும் உயிர்தோறும் ஆணவ மலப் பிணிப்பு வேறு வேறு வகையாகவே உள்ளது. இந்தப் பிணிப்பு வேறுபாடுதான் தகுதி அல்லது பக்குவம் என்பதை அறிக. நுண்ணுடம்பு கிடைத்தவுடன் உயிர்கள் இதி தகுதிக் கேற்பவே அறிவு விளங்கப்பெறும். இவ் விளக்கத்