பக்கம்:சைவமும் தமிழும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக இயல் 塑臀鳍 திற்டோகவே இச்சையும் முயற்சியும் நிகழும். இதனால் உயிர் தோறும் வினைகளும் வேறு வேறாய் அமையும். இவ் வினைக்கேற்பவே அவையும் வேறு வேறு பிறப்பினையும் அடையும் என்பதனை உணர்க. ஆக, கன்மத்தின் (வினையின்) இயல்புகளை ஒருவாறு விளக்கினேன். தெளிவு பெற்றிருப்பாய் என்று கருதுகின்றேன். அன்பன், கார்த்திகேயன். ఫ్రి அன்பு நிறைந்த கண்ணுதலப்பணுக்கு, நலன். நலனேயாகுக. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் முதலிரண்டைப்பற்றி விரித்து விளக்கினேன் முன்னர் எழுதிய கடிதங்களில், இக்கடிதம் தொடங்கி ஒரு சில கடிதங்களில் மாயையைப்பற்றி விளக்குவேன்.

ானைக்கு மண்போல, உலகத்திற்கு முதற் காரணம் மாயை' என்று முன்னரே குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூர் க. எனவே, உலகிற் காணப்படும் பொருள்கள் யாவும் இதன் காரியமேயாகும் என்பதை முதலில் உளங் கொள்க. இக் காரீயங்கள் பலவற்றையும் சைவ சித்தாந்தம் தனு, கரணம், புவனம், போகம் என நான்காக வகுத்தும் பேசும். தனு என்பது, பருவுடம்பு. கரணம் என்பது, அந்தக் கரணம், மனம் முதலிய உட்கருவிகள், புவனம் என்பது, அவ்வுடம்புகள் இயங்குவதற்கு அமைந்த இடம். போகம் என்பது, உயிர்கள் தம் தனு கரணங்களைக் கொண்டு இன்: துன்பங்களை நுகரும் துகர்ச்சிப் பொருள்கள்.

மாயை அதிசூக்குமப் பொருள். ஆதலின், தனுகான புவன டோகங்களாகிய அதி தூலப்பொருள்கள் நேரே