பக்கம்:சைவமும் தமிழும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱能链 சைவ சமய விளக்கு அதன் காரணமாக வர மாட்டா, அதனால் தத்துவங்கள்: எனப்படும் முதல்களே (மூலப்பொருள்களே) முதற்கண் மாயையினின்று தோன்றும்; பின்பு, அத் தத்துவங்களினின் றும் அவற்றின் காரியமாக தனு கரண புவன போகங்கள் தோன் று. ம். அதாவது உலகம் தோன்றும், ததி துவங்களினின்றும் தோன்றுவனவற்றைத் தாத்து ஓகம்’ என்று வழங்குவர். தத்துவங்களினின்றே உலகம் தோன்றுதலால் உலகத்திற்கு நேரே முதற்காரண 18ாக இருப்பவை தத்துவங்களேயாகும். தத்துவங்கள் மாயையின் காரியங்களாதலின், உலகிற்கு முடிவான முதற் காரணம் மாயையாகும் என்பதை உளங்கொள்க. உயிர்களின் ஆணவப்பிணிப்பு மூன்று வகையாக இருக்கும் எனவும், அவ்வகையால் உயிர்கள் விஞ்ஞானகலர் பிரளயாகவர், சகலர் என்று மூன்று வகையினவாய் இருக் கும் எனவும் முன்னெழுதிய கடிதங்களில் குறிப்பிட்டேன் அன்றோ? அவற்றை ஈண்டு நினைவுகூர்க. உயிர்கள் மூன்று வகையினவாய் இருத்ததலால் அவற்றின் பொருட்டு அமைந்த உலகமும் மூன்று வகையினவாக அமைந்துள்ளன. அவை துரய உலகம். கலப்புலகம், மாசுல கம் என்பனவாகும். இவை முறையே சுத்தப் பிரபஞ்சம், மிச்சிரப் பிரபஞ்சம், அசுத்தப் பிரபஞ்சம்,என வழங்கப்பெறும். மயக்கத் தாரா தொழிதல், மயக்கத்தைத் தருதல் என்பது பற்றிபுே ‘சுத்தம், அசுத்தம்’ என்ற சொற்கள் கை யாளப்பெறுகின்றன. ஆகவே, சுத்தப் பிரபஞ்சம் மயக்கத் தைத்தசராது; மிச்சிரப்பிரபஞ்சம் சிறிதே மயக்கத்தைத் தரும் அசுத்தப் பிரபஞ்சம் மயக்கத்தையே தரும், என்பது தெளிவாகப் புலனாகும். மூவுலகம் என்று சித்தாந்தத் தில் கொள்ளப்படும் உண்மைப்பொருள் இங்ங்ணம் கூறப் 88. தத்துனம்' என்பதற்குப் பிறமதங்களில் பொருள்' என் பதே கருத்து. சைவசித்தாந்தத்துள் தத்துவம்’ என்பதற் குக் கருவி என்பதுதான் போருள்-இதனை உணர்க.