பக்கம்:சைவமும் தமிழும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக இயல் 2 * * பெறும் மூவகை உலகங்களையேயாகும் என்பதைக் கருத் தில் இருத்துக. காரியமாய் உள்ள உலகம் இவ்வாறு மூவகைப் பட்டிருத் தலால் இவற்றிற்குக் காரணமான மாயையும் மூவகைப் பட்டிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டா. இவ்வாறு முன்றாகக் கூறுபட்டு நிற்கும் மாயை முறையே சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்று பெயர்களால் வழங்கப்பெறும். பிரகிருதி மாயையை மூலப் பிரகிருதி என்றும் வழங்குவர். மாயை' என்றால் என்ன? உலகில் பலவகையாகக் காணப்படும் பொருள்களாய்ப் பரிணமிக்கக் கூடிய பல வகைச் சக்திகளின் தொகுதியே மாயை' எனப்படுவது,. இச்சக்திகள் உயிர்களைப் பற்றுமிடத்து அவ்வுயிர்க ளிடத்து இயற்கையாய் உள்ள ஆணவப்பிணிப்பினால் சுத்த மும், மிகச்சிரமும், அசுத்தமுமாகி விடும். எனவே, மாயை சுத்தமாய் இருந்து மயக்கத்தைத் தாராதொழிதற்கும். உயிர்களைப் பிணித் திருக்கும் ஆணவமலத்தின் மென்மை வன்மைகளே காரணம் என்பது தெளிவு. மாயைக்கு இயல்பாய் உள்ள தன்மை விளக்கத்தைத் தருவதாகும். ஆயினும், அது மயக்கத்தைத் தருவது ஆணவத்தின் சார் பினாலாகும் என்பது தெளிவு. இது வெய்யலில் வைக்கப் பட்டிருக்கும் கரும்புச்ாேறு புளிப்பை அடைவதுபோலாகும். இனிப்பதாகிய பால் புளிப்பையுடைய தயிராகி விடுதல் போல்வதாகும் என்றும் சொல்லலாம். ‘விஞ்ஞானகலர்' என்னும் ஒரு மலம் உடையவர்களை ஆணவம் மென்மையாகப் பிணித்திருத்தலால் அவர்களை அடைகின்ற மாயை அசுத்தமாய் மதுக்கத்தைச் செய்யாது; சுத்தமாகவே இருக்கும். பிரளயாகலர் என்னும் இரு மலம் உடையவர்களை ஆணவம் இடைநிலை:ாகப் பற்றியிருத்த லால் அவர்களை அடைகின்ற மாயை திறிதளவு அசுத்த மாகி சிறிதளவு மயக்கத்தைச் செய்யும். எனவே, ஒன்றே