பக்கம்:சைவமும் தமிழும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌翰 ಜ೫ ಕರಿಖ ಔಳೆಹಿತ್ರ யாகிய மாயை ஆணவுப்பிணிப்பின் வேறுபாட்டினால் சுத்தம், மிச்சிரம், அசுத்தம் என மூன்றாகி விடுகின்றது என்பதை உணரலாம். இக் கூறியவற்றால் சுத்தப் பிர பஞ்சம் விஞ்ஞானகலர்க்கு உரியது என்பதும், மிச்சிரப் பிரபஞ்சம் பிரளயாகலர்க்கு உரியது என்பதும் அசுத்தப் பிரபஞ்சம் சகலர்க்கு உரியது என்பதும் அறிய தீதக்கது. மேற்கூறியவற்றை இன்னும் சந்துத் தெளிவாக்கு வேன். ஒருமலம் உடையவர், இருமலம் உடையவர், மும் மலம் உடையவர் என்றெல்லாம் சொல்வது மேற்குறிப் பிட்ட மயக்கம் இன்மையும் மயக்கம் உண்மையும் பற்றியே யாகும். அதாவது, விஞ்ஞான கவர்க்கு ஆணவப்பிணிப்பு மென்மையாயிருப்பதால் அவர்களுக்குள்ள கருவி கரணங் கள் மயக்கத்தை விளைவிப்பதில்லை. ஆகவே, அவற்றைக் கொண்டு ஈட்டியும் நுகர்ந்தும் வரும் வினைகளும் மயக்கத் தைச் செய்யா. இது பற்றியே அவர்கட்கு மாயைக் கன் மங்கள் இல்லை என ஆகமங்கள் கூறுகின்றனவேயன்றிச் சுத்தமாயையும் சுத்தகன்;மும் இல்லை என்னும் கருத்தி னால் அன்று. இன்னும் விஞ்ஞானகலர், பிரளயாகலர்' கட்கு மயக்கம் இல்லை என்பதற்கும் “சகலர்க்கு உள்ள மயக்கம் போன்ற மயக்கம் இல்லை’ என்பதே கருத்தாகும், ஆணவுப்பிணிப்பு சிறிதேனும் உள்ளவரையில் மயக்கம் சிறிதாயினும் உளதாகுமேயன் தி அறவே நீங்காது. நீங்கு மெனின் விஞ்ஞானகலராகும் நிலையே மூத்தி நிலையாய் விடும். இது பொருந்தாமையால் விஞ்ஞான கலருக்கு "மாயை கன்மங்கள் இல்லை என்பதற்கும் பொருள் அசுத்த மாயையும் அசுத்த கன்மமும் இல்லை என்ப தாகும். இஃது இனிது விளங்குதற் பொருட்டே சுத்த மாயையை மாயை' என்று குறியாது "விந்து என்றே குறித் தல் பெரும்பான்மை வழக்கமாய் உள்ளது. இங்ஙனமே அசுத்தமாயையையும் அடைமொழியின்றி மாயை' என்றே குறித்துச் சொல்லுதல் பெரும்பான்மை வழக்கமாய் உள்ளது. சுத்த மாயை, அசுத்த மாயை என்ற இரண்டை யும் இரண்டு தனிப் பொருள்போலக் கூறுதலும் இது