பக்கம்:சைவமும் தமிழும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு இயல் 2襲登 பற்றியே யாகும். பிரளயாகலர்க்கு மாயை இல்லை என் பதற்கும் இவ்வாறு அசுத்த மாயை இல்லை’ என்பதே பொருளாகும். இக்கூறியவற்றால் சகலர்க்கு உரியபிரகிருதி மாயையே உண்மையில் அசுத்த மாயை என்பதாகின்றது. ஆயினும் அஃது இயற்கையில் அவ்வாறு அமையாது மிச்சிர மாயை யின் பரிணாமமாய் அமைவதால் அது தனித்த ஒருமாயை யாகக் கூறப்பெறாமல் பிரகிருதி என்னும் தத்துவமாகக் கூறப்பெறுகின்றது. ஆகவே, அசுத்த மாயை' எனக்குறி யிட்டு வழங்கப்படும் மாயை உண்மையில் மிச்சிர மாயையே என்பதை அறிந்து, தெளிவாயாக. மும்மலத்தால்: பிணிப்புடைய சகலர்க்கும் சுத்தமாயா தத்துவத்தோடு தொடர்பு இல்லை. ஆயினும், மிச்சிரமாயா தத்துவத் தோடு தொடர்பு உண்டு. இதுபற்றியும் மிச்சிர மாயை 'அசுத்த மாயை' எனவும் வழங்கப்பெறுகின்றது. இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ நினைவில் இருத்துதல் வேண்டும். சுத்தமாய் உள்ள பொருள் அகத்த மாகுமாயின் அது தனது வியாபகத்தை" இழக்கும். காரணம், அசுத்தமானது ஆணவத்தின் தொடர்பாகும். ஆணவத்தின் இயல்பு அணுத் தன்மையைச் செய்வது என் பதை நீ நன்கு அறிவாய். அதனால் ஆணவத்தைச் சார்ந்த பொருள் தனது வியாபகத்தை இழப்பதாகின்றது. இத ாைல் சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை வியாப் பியமும்" ஆகின்றன. இக்காரணத்தால் சுத்த மாயை "ஊர்த்துவமாயை' என்றும், அசுத்த மாயை அதோமாயை' என்றும் வழங்கப்பெறுகின்றன. மேல், கீழ்' என்பன ஈண்டு வியாப்பியங்களைக் குறிக்கின்றன என்பதை நன்கு 49. வியாபகம்-விரிவு, 岛莎。 வியாப்பியம்-அடக்கம் 51. ஊtத்துவம்-மேல் 82. அத:-கீழ்,