பக்கம்:சைவமும் தமிழும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 艺2勒 வழங்குவர். இதற்கு படம் குடிலானாற்போல’ என்று எடுத்துக்காட்டு திருவர். படம்.துணி; குடில்.குடிசை. மண் பானையாதல், போன் அணியாதல், பால் தயி ராதல், நெல் பொரியாதல், மரங்கள் இருக்கையாதல் போன்று உருமாறுதல் பரிணாமம் என்ற பெயர் பெறும். இவ்வாறன்றி நூல் ஆடையாதல், மலர் மாலையாதல் போல்வன ஆரம்பம்’ எனப்படும். ஏனெனில், நூல்களையோ மலர்களையோ ஒரு வழியாகக் குவித்துவிட்டால் ஆடை யும் மாலையும் ஆகிவிட மாட்டா. ஒவ்வொன்றாக எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக முறையே வைத்து இணைத்தால் தான் ஆடை உருவாகும்; மாலையும் உண்டாகும். ஆகவே இங்கு ஒன்று, இரண்டு, மூன்று...என்று தொடங்கி முறையே தொடர்ந்து காரியப்படுதலால் இஃது ஆரம்பம்? என்ற திருநாமம் பெறுகின்றது. நெல் பொரியாதல், எள் குவியலாதல் போல்வன சமுதாயம் என்ற பெயரால் வழங்கும். சமுதாயம்தட்டம். இவை மேற்குறிப்பிட்டவைபோல ஒன்று இரண்டு, மூன்று” என்று ஒன்றன்பின் ஒன்று’ என்ற முறையில் தொடராமல் பல ஒருங்கு திரண்டு காரியமாகின்றன. அதனால் இக் காரியப் பாடு ஆரம்பம் அன்று. இங்ங் எம் 'ஆரம்பத்திற்கும்’ "சமுதாயத்திற்கும் வேறுபாடு காண்க. இப்பி வெள்ளியாதல், கயிறு பாம்பாதல் போல்வன உண்மையில் காரணம் காசிய மாக மாறுவன அல்ல; காண்போனுக்கு உள்ள மயக்கம் காரணமாக அவை வெறும் தோற்ற மாத் திர த் தில் அவ்வாறு காட்சியளிக் கின்றன. இவை போல்வன விவர்த்த' எனப்படும். விவர்த்தனம்-வேற்று நிகழ்ச்சி. மேற்கூறியவற்றுள் ஒரு சிலவற்றை மேற்கொண்டு பிற சமயங்கள் உலகத்தின் காரியப்பாட்டை ஒவ்வொரு விதமாக விளக்கும். அவற்றை ஈண்டு உனக்குக் காட்ட வில் ை. சைவசித்தாந்தம் சுத்த மாயையின் காரியம்