பக்கம்:சைவமும் தமிழும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4சு இயல் 露23 தோற்ற முறையாகும். ஒடுக்க முறையின் கூறின் வைகரி முதலாவதாக அமையும். இனி, இவ்வொன்றைப்பற்றியும் விளக்குவேன். சூக்குமை வாக்கு: சுத்தமாயையின் முதல் விருத்தியாய் முதற்கண் நிற்பது. இதற்கும் இதன் காரண நிலைக்கும் வேறுபாடு மிகுதியாக இல்லை. காரண நிலையிலுள்ள சுத்தமான ஏனை ஒனை மூவகை வாக்குகளாய் விருத்திப் படுதற்குத் தகுதி பெற்று நிற்கும் நிலையே சூக்குமை வாக்காகும். இது 'பரை'என்றும் ‘காதம்' என்றும் சொல்லப் படும். இதற்குப் பற்றுக் கோடாதல்பற்றியே சிவதத்துவத் திற்கு காதம் என்பது பெயராயிற்று. இது காரண நிலையிலேயே நிற்பதால் அழிவின்றி நிற்பதாகவும் சொல்லப்படும். பைசந்தி வாக்கு மேற்குறிப்பிட்ட சூக்குமை வாக்கு மேலும் விருத்திப்பட்டு யைசக்தி வாக்காகும். அதாவது, சொல்வடிவம் சிறப்பு வகையில் விளங்காது பொதுவகையில் விளங்கி நிற்கும் நிலையாகும் இது. பைசந்தி என்பது, ‘பஸ்யந்தி’ என்ற சொல் வடிவம் திரிந்த நிலை. இதற்கு விளங்குவது என்பது பொருள். சூக்குமைவாக்கு போல் முற்றிலும் விளங்காது நிற்றல் இன்றி, ஒருவாறு விளங்கி நிற்பதால் இதற்கு ‘பைசந்தி’ என்று பெயர் வந்தது, இது விளங்கியும் விளங்கா தும் நிற்பதற்கு மயில் முட்டையி லுள்ள நீரினை உவமை கூறுவர். ம்யில் முட்ட்ையிலுள்ள நீரில் மயிலினிடத்துள்ள ஐவகை நிறங்களும் தோன்றியும் தோன் நாதும் நிற்கும். குக்குமை பைசந்தி என்ற இருவகை வாக்கிலும் மொழி வேறுபாடு இல்லை. மத்திமை வாக்கு: டைசந்தி என்னும் நிலையில் இருந்த பொருளுணாடி, சொல். வடிவில் இனிது விளங்கித்தோன்ற அதன் பின் எழுத்து வடிவில் நன்கு விளங்கித் தோன்றி, அதனை அவ்வாறே சொல்ல எழும் முயற்சியைப் பெற்று 'உதானன் என்னும் காற்றால் உந்தப்பட்டு மிடற்றளவில் (கண்டத்தளவில் மெல்ல ஒலித்து நிற்பது மத்திமை