பக்கம்:சைவமும் தமிழும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சைவ சமய விளக்கு வாக்காகும். பைசந்திக்கும் வை:கரிக்கும் இடை நிற்றல் பற்றி இது மத்திமை என்ற பெயர் பெற்றது. வைகரி வாக்கு: 'உதானன் என்னும் காற்றால் உத்தப் பட்டு மிடற்றளவில் நின்ற சொற்கள் பிராணன் என்னும் காற்றால் நன்கு வெளிப்படுத்தப்பட்டுச் சொல்லுவேசன் செவிக்கும் கேட்போன் செவிக்கும் புலனாவது வைகரி வாக்காகும். இது சொல்வோர் செவிக்கு மட்டும் புலனா கின்ற அளவில் நிற்பின் சூக்கும் வைகரி என்றும், கேட்போர் செவிக்கும் புலனாகின் துல வைகரி என்றும் வழங்கப் பேறும், இது பல், இதழ், நா. அண்ணம், மூக்கு என்னும் உறுப்புகளில் பட்டுச் சிதறிப் போவதால் வைகரி’ எனப்பட்டது. கைசி.விகாரம் உடையது. விகாரம் என்பது எழுத்துகளின் தோற்றக் கேடுகள், மத் கிமை, வைகரி' என்ற இருவகை வாக்குகளும் மொழி வேறுபாடுகளை உடையன. இங்கனம் சுத்த மாயை ஒன்றே நால்வகை வாக்கு களாய் விருத்தில் பற்றி நிற்கும் என்பதை அறிக. இந்த நால் வகை வாக்குகளாலே யாதோர் உயிர்க் கும் சவிகற்ப ஞானம்' இறப்புணர்வு உண்டாகும். இவை இல்லையேல் நிரு விகற்ப ஞானம்' (பொது உணர்வு) உண்டாகுமேயன்றி சவிகற்பஞானம் உண்டாக மாட்டாது. இந்த வாக்குளின்றில் பொருள்களை உணரும் ஆற்றல் எவர்க்கேனும் என்றாவது உளதாகுமாயின் அவர் அன்றே பாசத்தின் நீங்கிய முத்தராவார். இதனால் எல்லா உயிர் கட்கும் சவிகற்ப ஞானம் உண்டாதற்கு இவ்வாக்குகள் இன்றியமையாது வேண்டப்படும்என்பது தெளிவாகும். இங்ங்ணம் தெளிவாகவே இவ்வாக்குகள் விஞ்ஞானகலர், பிரள பாகலர், சகலர் என மூவகைப்பட்ட ஆன்ம sa: சவிகற்ப ஞானமாவது, ஒரு பொருளைப் பற்றி அதன் கூறுபாடுகள் பலவற்றையும் உணரும் உணர்வு. 55 நிஆவிகற்ப ஞானமாவது, பொருளின் கூறு பாடுகளின்றி - "இஃது ஒரு பொருள் என்ற அளவில் உணர்வது.