பக்கம்:சைவமும் தமிழும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சைவ சமய விளக்கு பிறந்து இறக்கும் உயிர்களுக்குத் தனு கரண புவன போகங் களாய் வந்து பொருந்தா என்பதை உணங்கொள்க. இனி ஐந்து தத்துவங்களையும் ஒவ்வொன்றாய் விளக்குவேன். சிவம் : உலகத்தைத் தொழிற்படுத்தக் கருதுங்கால் எல்லாம் வல்ல இறைவனுக்கு அவனது இச்சை, ஞானம், கிரியை (விழைவு, அறிவு செயல்) என்னும் மூன்று சக்தி களுள் இச்சை எஞ்ஞான்றும் ஒரு நிலையில் நிற்கும். ஏனை ஞானமும் கிரியையும் தனித்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும், குறைந்தும், சமமாய் நின்றும் தொழிற்படும். அவ்விடத்து இறைவன் முதற்கண் ஞான சக்தி ஒன்றானே சுத்தமாயையைப் பொதுமையில் நோக்கி சிவன்’ எனப் பெயர் பெற்று நிற்பன், அவனால் நோக்கப்பட்ட அந் நிலையில் சுத்த மாயை முதல் விருத்தியாய் அவனுக்கு இடமாகும். ஆகவே, சிவனுக்கு இடமாதல்பற்றி, அம். முதல் விருத்தியே சிவம் என்னும் பெயருடைய தத்துவ மாய் நிற்கும். மேலே குறிப்பிட்ட நால்வகை வாக்குகளில் சூக்குமை வாக்காகிய நாதத்திற்குப் பற்றுக் கோடாதல் பற்றி இத்தத்துவம் நாதம்’ என்னும் திருப்பெயரையும் பெற்று நிற்கும் என்பதையும் உளங் கொள்க. சத்தி : ஞானசத்தியால் முதற்கண் சுத்தமாயையைப் பொதுமையில் நோக்கிய இறைவன், கிரியா சத்தி ஒன்றாலேயே சுத்தமாயையைக் காரியப்படுத்தப் பொது வகையில் சங்கற்பித்து சத்தி எனப் பெயர் பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்தமாயை இரண்டாம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாகும். சத்திக்கு இடமாதல்பற்றி இவ் விரண்டாம் விருத்தியே சத்தி என்னும் திருப்பெயருடைய தத்துவமாய் நிற்கும். பைசந்தி விந்து எனவும் பெயர் பெறுமrதலின், அதற்குப் பற்றுக்கோடாகவுள்ள இத் தத்துவமும் விந்து' எனப் பெயர் பெற்று நிற்கும். இதனை அதிக. சதாசிவம் : ஞான சக்தியால் பொதுமையில் நோக்கி, கிரியா சக்தியால் பொதுமையில் சங்கற்பித்த இறைவன்,