பக்கம்:சைவமும் தமிழும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு இயல் 22? பின் அவ்விரண்டினாலும் சுத்த மாயையைச் சிறப்பு வகை வில் நோக்கிச் சிறப்பு வகையால் சங்கற்பித்து ஞான சக்தி பும் கிரியா சக்தியும் சமமாய்த் தொழிற்பட, சதாசிவன்’ எனத் திருநாமம் பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்த மாயை மூன்றாம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாகும். சதாசிவனுக்கு இடமாதல்பற்றி இம்மூன்றாம் விருத்தி சதாசிவம்’ என்னும் பெயருடைய தத்துவமாய் நிற்கும். நால்வகை வாக்குகளில் இது மத்திமை வாக்கிற்குப் பற்றுக் கோடாக அமைகின்றது. ஆகவே, இறைவன் வேதாக மங்களைச் சொல் வடிவில் தோற்றுவிக்கும் நிலை இதுவே யாகும். இத்தத்துவம் 'சாதாக்கியம்’ என்றும் வழங்கப் பெறும். ஈசுரம் : ஞான சக்தி, கிரியா சக்தி இரண்டையும் சமமாய்த் தொழிற்படுத் திச் சுத்த மாயையைச் சிறப்பு வகையில் நோக்கியும், சிறப்பு வகையால் சங்கற்பித்தும் நின்ற இறைவன், பின் ஞான சக்தியை மிகச் செலுத்தாது கிகியா சக்தியை மிகச் செலுத்திச் சுத்த மாயையைச் சூக்குடிமாகக் காரியப்படுத்தி. ஈசுரன்’ என்று பெயர் பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்த மாயை நான்காம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாக அமையும், ஆகவே, ஈகரனுக்கு இடமாதல் பற்றி இந்நான்காம் விருத்தியே "ஈசுரம் என்னும் திருப்பெயருடைய த த்துவமாய் நிற்கும். இந்நிலையில் நிற்கும் இறைவன் மகேசுரன்’ என்றும், இத் தத்துவம் மகேசுர தத்துவம் என்றும் வழங்கப் பெறுதலும் உண்டு என்பதையும் அறிந்து தெளிக. சுத்த வித்தை: கிரியா சக்தியை மிகச் செலுத்திச் சுத்த மாயையைச் சூக்குமமாய்க் காரியப்படச் செய்த இறைவன், பின் ஞான சக்தியை மிகச் செலுத்தி அதனைத் துரலமாகக் காரியப்படச் செய்து வித்தியேசுரன்’ எனப் பெயர் பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்த மாயை ஐந்தாம் விருத்திப் பட்டு அவனுக்கு இடமாகும். ஆகவே, "வித்தியேசுரன்’ என்னும் இறைவனுக்கு இடமாதல்பற்றி அவ்வைத்தாம்