பக்கம்:சைவமும் தமிழும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சைவ சமய விளக்கு விருத்தியே வித்தை என்னும் பெயருடைய தத்துவமாய் நிற்கும். அசுத்த மாயையில் தோன்றும் வித்தை’ என்பதும் உளதாதவின், அதனினின்றும் வேறுபடுத்திக் காட்டுதற்கு இது "சுத்த வித்தை’ என்றும் பெயரிட்டு வழங்கப்படு. கின்றது. மேற்குறிப்பிட்ட ஐந்து தத்துவங்களும் சிவனால் நேரே காரியப்படுத்தப்பட்டுச் சிவனுக்கே இடமாதல் பற்றி சிவ தத்துவம் என்று பெயர் பெற்றது. சுத்த மாயையின் காரீயமாய்ச் சுத்தமாய் இருத்தல்பற்றி சுத்த தத்துவம்' என்றும் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் உள்ள இறைவன் தடத்த சிவன்’ எனப் பெயர் பெறுகின்றான். இவண் குறிப்பிட்ட ஐந்து நிலைகளில் சிவன், சக்தி” என்னும் இரு நிலைகளில் இறைவன் அருவமாய் இருப் பான். சதாசிவன்’ என்னும் நிலையில் அருவுருவமாய், இருப்பான். மகேசுவரன்’ வித்தியே சுரன்’ என்னும் நிலைகளில் உருவமாய் அமைவான். இதனால்தான் உமா மகேசுவரர், சோமாஸ்கந்தர், கலியாண சுந்தரர், பிட்சா டணர் முதலிய உருவத் திருமேனிகள் எல்லாம் மகேசுர மூர்த்தங்கள்’ என வழங்கப்படுகின்றன என்பதை உளங் கொள்க. இன்னும் இவ்விடத்தில் அறிந்து கொள்ள வேண்டி யவை: சிவம், சத்தி’ என்னும் அருவ நிலை ஒடுக்க நிலை ஆதலின், அவை "இலய கிலை (லயம்-ஒடுக்கம்) எனப் படும். சதாசிவனாகிய அருவுருவ நிலை ஒன்றும் ஐந் தொழிலில் புகும் நிலையாதலின் அது போக கிலை என வழங்கப்பெறும். மகேசுரன், வித்தியேசுரன்’ என்னும் உருவ நிலை இரண்டும் ஐந்தொழிலை நடாத்தும் நிலையா தலின், அவை "அதிகார நிலை எனச் சொல்லப்படும். இதனால் இலய சிவன், போக சிவன், அதிகார சிவன். எனத் தடத்த சிவனது நிலை மூன்றாகின்றது. இது. காரணமாகவே சுத்த தத்துவங்களும் இலய தத்துவம்", "போக தத்துவம்’, ‘அதிகார தத்துவம் என மூவகையினவா