பக்கம்:சைவமும் தமிழும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சைவ சமய விளக்கு மாகிய ஈசுர தத்துவத்தை அடைந்து, மந்திர மகேசுரர் எனப் பெயர் பெற்று நின்று மகேசுர மூர்த்தி ஆணையின் வழி மந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தி நிற்பர். இவர்க்குப் பரிவாரமாவோரும், பலர் உளர். இவர்க்கெல் லாம் இடமாவது இந்த சகர தத்துவமாகும் என்பதை உளங் கொள்க. இன்னும், போக மவ வாசனை உடையராய் சதாசிவ. மூர்த்தியது சலோக்கியம், சாமீப்பியம், சாருப்பியம், என்பவைகளைப் பெற்று அணுசதாசிவர் என்னும் பெய குடன் சுத்த போகத்தை அதுபவித் திருப்போர் பலர். இவர்கட்கெல்லாம் இடம் இச்சதாசிவ தத்துவமேயாகும். இவ்வாறே, துல இல் மல வாசனையுடைவர் சத்தி தத்துவத்தையும், சூக்கும இiல் வாசனையுடையவர் சிவ தத்துவத்தையும் அடைந்து அங்குள்ள போகத்தை அநுப வித்திருப்பர். இந்த இரு தத்துவங்களும் இவர்கட்கு இடங் களாக அமையும். ஆகவே, சிவ தத்துவம் முதலிய ஐந்து தத்துவங்களிலும் புவனங்கள் உள்ளன என்பது தெனி வாகும். இப்புவனங்கள் முறையே பத்து, ஐக்து, ஒன்று, எட்டு, ஒன்பது எனச் சிவாகமங்கள் வரையறுத்துப் பேசும். மேலும், இச்சுத்த தத்துவம் கால தத்துவத்தைக் கடந்து நிற்கும் ', இதனால் கித்தியம் (தோற்றக் கேடுகள் இல்லாதன) என்று கூறப்படும். எனினும், காரியங்கள் யாவும் அநித்தியமாதலால் இவ்வாறு கூறுவது உபசாரமே என்று அறிக. சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவ. மாகும் என்னும் சிவஞான சித்தியார் கூறுவதை அடிப்படை யாகக் கொண்டு சுத்த மாயையை இறைவனது திருமேனி 51. இவை இன்னவை என்பதுபற்றிய விவரங்களைப் பயணி: யலில் காண்க. - 58. சுத்த தத்துவத்தாலான பரமபதத்தை வைணவம் காலம் நடையாடாததேசம் என வருணிக்கும்.