பக்கம்:சைவமும் தமிழும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 23 யாகக் கொள்வர் சிலர். இக்கொள்கை அந்நூலுள் "காயமோ மாயையன்று, காண்பது சக்திதன்னால் என்பது போன்ற பலவற்றோடு முரணுமாதலால், இறைவனுக்கு அவனது சக்தியின்றிப் பிறிதொன்று வடிவமாகாது என் பதைக் கருத்தில் இருத்துக. அதிட்டானம்’ என்பதே *வடிவு’ என்று உபசரித்துக் கூறப்பட்டதாகக் கொள்கe ஆகவே, இத்தத்துவங்கள் இறைவனுக்கு இடமாதலன்றி வடிவம் ஆகாமை உணர்க. சிவ தத்துவம் ஐந்தும் உனக்குத் தெளிவாகியிருக்கும் எனக் கருதுகின்றேன். அன்பன். கார்த்திகேயன். 器翻 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனேயாகுக. இக்கடிதத்தில் அசுத்த மாயையில் தோன்றும் தத்து வங்கள் பற்றி விளக்குவேன். அசுத்த மாயையை இறைவன் தானே நேர் நின்று தொழிற்படுத்தாது சுத்த வித்தையில் நிற்கும் வித்தியேசுரர் எண்மருள் முதல்வராகிய அனந்த தேவர் வழியாகவே தொழிற்படுத்துவன். ஆகவே, அசுத்த மாயைக்கு அதிகார மூர்த்தி அனந்த தேவர் என்பதை அறிக. . இன்னொரு செய்தியையும் ஈண்டு நீ உளங்கொள்ளல் வேண்டும். ஆணவம், கன்மம் இவற்றோடு கலவாதது சுத்த மாயை. இவ்விரண்டனோடும் கலந்திருப்பது அசுத்த மாயை. கலப்பற்ற சுத்த மாயை துண் பொருளாய் உள்ளது. கலப்புற்ற அசுத்த மாயை பருப் பொருளா யுள்ளது. இறைவன் நுண்ணியோன்; அவனது சக்தியும் துன்னிது. ஆகவே அவன் நுண் பொருளையே நேரே