பக்கம்:சைவமும் தமிழும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சைவ சமய விளக்கு தொழிற்படுத்துவான்; பருப்பொருளை பிறிதொரு வாயி லாகவே தொழிற்படுத்துவான். இறைவன் தவிர ஏனை யாவரும் உயிர் வகையினர். இறைவனை நோக்க உயிர்கள் யாவும் பருப்பொருள்கள் என்பதை நீ நன்கு அறிவாய். அனந்த தேவர் ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர் எனப்படும் வகையினருள் மலம் நீங்கி ஞானம் பெற்றுத் துால அதிகார மல வாசனை மாத்திரம் உடையவர். அதிகார மலம்’ என்பது, இறை வனைப் போலத் தாமும் உலகத்திற்கு முதல்வராய் நின்று அதனை இயக்குதல் வேண்டும் என்னும் விருப்பத்திற்குக் காரணமாகிய ஆணவத்தின் ஆற்றல், அனந்த தேவர் முதலியோருக்கு அவ்விருப்பம் இருப்பினும், அவர் இறை வனை மறந்து அதிகாரத்தில் மூழ்கிக் கிடவாமையால், அவர்க்கு இம்மலம் இன்றி இதன் வாசனை மாத்திரமே உள்ளது என்பதை அறிக. இங்ங்ணம் இவர் உயிர் வருக்கத்தினராய் மல வாசனை நீங்காது நிற்றலின் அசுத்த மாயையாகிய தூலப் பொருளை இறைவன் இவர் வழியாகச் செயற்படுத்துகின்றான் என்பதையும் உளங் கொள்க. இறைவன், அனந்த தேவர் வழியாக அசுத்த மாயை யைச் செயற்படுத்தத் திருவுளம் பற்றுதலால், இவருக்கு அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் உள்ளன என்பது சொல் லாமலே விளங்கும். இவற்றால் இவர் பிரளயாகலர், சகவர் என்னும் இருவகை உயிர்களின் வினை வகைகளை அறிந்து அவற்றிற்கேற்ப அசுத்த மாயையைக் காரியப் படுத்துவர் என்பதையும் தெளிக. அசுத்த மாயையினுள் தோன்றும் தத்துவங்கள் ஏழு. அவை காலம், கியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பனவாகும். இந்த ஏழையும் அனந்தர் என்னும் வித்தி யேசுரர் வாயிலாகச் செயற்படுத்துதலால் இவை வித்தியா தத்துவம் எனப் பெயர் பெறுகின்றன. மாயை' என்பது ஒரு