பக்கம்:சைவமும் தமிழும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இய ல் 233 காரணம் பற்றி இறுதிக் கண் வைத்துச் சொல்லப்படினும், இதுவே முதல் தத்துவமாகும். அசுத்த மாயையின் ஒரு பகுதி அனந்ததேவரால் ஏனைய தத்துவங்கள் தோன்று தற்குத் தகுதியாகச் செய்யப்பட்டது. இது மோகினி ஆசனவும் வழங்கப்படும். மோகினி-மோகிக்க-மயங்கச் செய்வது. இதினின்றுதான் மேற்குறிப்பிட ஏழு தத்துவங் களும் தோன்றுகின்றன. இவை தோன்றும் முறையை முதலில் விளக்குவேன் சுத்த மாயையின் காரியங்கள் விருத்தி என்றும், அசுத்த மாயையின் காரியங்கள் பரிணாமம்’ எனவும், இந்தப் பரிணாமமும் ஒரு புடைப் பரிணாமமே எனவும் முன்னர் கூறினேனல்லவா? அவற்றை ஈண்டு நினைவுகூர்க. அசுத்த மாயையின் ஒருபுடைப் பரிணாமமாகிய மாயா தத்துவத்தி ணிைன்றும் காலம்’ என்னும் தத்துவம் தோன்றும். மாயா தத்துவத்தினின்றும் கியதி' என்ற தத்துவம் தோன்றும்; இதனை அடுத்து கலை என்னும் தத்துவம் தோன்றும். மாயை என்னும் தத்துவம் அனந்த தேவரின் இச்சையின் வழி ஒருபகுதி காலமாயும், மற்றொகு பகுதி நியதியாகவும், வேறொரு பகுதி கலையாகவும் பரிணமித்து நிற்கும் என்பதை அறிக. இவை தோன்றிய பின்பும் மாயை என்னும் தத்துவமும் குறையாது நிற்கும். அதன் பின்னர் கலையி னின்று வித்தை’ என்னும் தத்துவமும், வித்தையி ளிைன்று அராகம்’ என்னும் தத்துவமும் தோன்றும். இத் தத்துவங்கள் அனைத்தும் உயிர்கட்கு உடம்பாய் நின்று: பலவகையில் துணை புரியும். இனி, இத் தத்துவங்கள் ஒவ் வொன்றையும் தனித்தனியே விளக்குவேன். காலம்: இது இறப்பு, நிகழ்வு. எதிர்வு என மூன்றாக நிக்கும். இவற்றுள் இறந்த காலம் ஏனைக் காரணங்க ளோடு இயைந்து ஆன்மாவின் ஞானம். கிரியை, இச்சை என்பவற்றை வினை, வினைப் பயன்களினின்றும் பிரிக்கும். நிகழ்காலம் அவ்வாற்றான் இம் மூன்றனையும் அவ்விரண்ட னோடும் கூட்டும். எதிர்காலம் ஞானம் முதலிய மூன்றனை