பக்கம்:சைவமும் தமிழும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23母 சைவ சமய விளக்கு ஆம் வினை, வினைப் பயன்களை எதிர்நோக்கச் செய்யும். இவண் குறிப்பிட்ட மூவகைக் காலங்களும் தோன்றி நின்று: அழியும் ஒவ்வொரு பொருளிலும் வேறு வேறு உள்ளன. எல்லாக் காலங்களும் உயிர்களின் வினைக்கேற்பச் செலுத் தும் இறைவனது சக்தியின் வழியே தத்தம் காரியத்தைச் செய்யும். எல்லாச் செயல்கட்கும் காலமே பற்றுக்கோ டாகும். காலம் இன்றேல் செயல் இல்லை. காலத்தின் கோலம் என்ற பேச்சு வழக்கினையும் சிந்திக்க, கியதி: அவரவர் செய்த வினையை அவரவரே நுகரு. மாறு வரம்பு செய்து நிறுத்துவது இத் தத்துவம். அஃதா வது, ஒருவர் தாம் செய்த வினையின் பயனையன்றிப் பிறர் செய்த வினையின் பயனை துகர வொட்டாமலும், தாம் செய்த வினையைப் பிறர் துகராது ஒழிய வொட்டாமலும், தம் வினைகளின் பயனைத் தாமே நுகருமாறு அவற்றில் நிய மித்து நிறுத்தும். இத் தத்துவம் இல்லையாயின், ஒருவர் தாம் செய்த தீவினையின் பயனைத் தாம் நுகராது ஒழிதலும் பிறர் செய்த நல்வினையின் பயனைத் தாம் துகர்தலும் கூடுவனவாக, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே நுகர்தல் என்னும் நியதி இல்லை. பாய்விடும். இன்னும் விளங்கக் கூறினால், இறைவனது சத்தி கன்மத்தை வரையறுக்கும் செயலுக்கு இந் நிய தி. தத்துவம் கருவியாய் நிற்கும் என்பதாம். - கலை : இஃது ஆன்மாவிற்கு உள்ள ஞான, இச்சா, கிரியா சக்திகளுள் கிரியா சக்தியை விளக்கி, அதனைத் தொழிற்படச் செய்யும். கலித்தல்’ என்பதற்கு, "நீக்குதல்’ "எழுப்புதல்’ என்னும் பொருள்கள் உளவாதல் அறிக.. ஆணவ மலத்தைச் சிறிதே நீக்குதல்’ என்பதற்கு ஆன்மா வின் கன்ம நிலைக்கு ஏற்ப நீக்குதல்’ என்பது பொருளாம். எனவே, ஆன்மா கிரியா சக்தி விளங்கப்பெற்ற பின்னரே யாதொரு செயலையும் செய்வோனந்தன்மையை (கர்த் திருத்துவம்) எய்தி நிற்கும் என்பது தெளிவுறுதல் காண்க.