பக்கம்:சைவமும் தமிழும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 235 வித்தை: இது மாயையினின்றும் தோன்றாமல், கலையி னின்றே தோன்றும் என்பதை நினைவுகூர் க. ஞானசக்தி கலையினால் எழுப்பப்பெறும் கிரியா சக்தியின் வேறாகாது அதன் ஒரு கூறேயாதலின்: அதனை எழுப்பும் தத்துவமும், கிரியா சக்தியை எழுப்பும் கலையின் ஒரு கூறாய் அதனி னின்றே தோன்றும் என்பதை அறிக. இஃது ஆனவ மலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் விஞ்ஞான சக்தியை எழுப்பும். இன்னொரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். கிரியா சக்தியும், ஞான சக்தியும் வேதல்ல வாயினும் கிரியையாய் நிற்கும் கூறு, அப் பொழுதே ஞானமாய் நில்லாது; ஞானமாய் நிற்கும் கூறு. அப்பொழுதே கிரியையாய் நில்லாது; இஃது இச்சைக்கும் பொருத்தும். ஆகவே, இம்மூன்று சத்திகளும் ஒருங்கே வேண்டப்படும்பொழுது, அவற்றை வேறு வேறு கூறுக ளாக எழுப்புவதற்கு, வேறு வேறு தத்துவம் வேண்டும் என்பதை உளங் @5r旁5. அராகம்: இது வித்தையினின்று தோன்றுவது. ஆன்மா வின் கிரியா சக்தியைக் கலை என்ற தத்துவமும், ஞான சக்தியை வித்தியாதத்துவமும் முறையே முன்னும் பின்னும் எழுப்ப, எஞ்சி நின்ற இச்சா சக்தியை இறுதிக்கண் நின்று எழுப்பும் தத்துவமாகும் இது. காலதத்துவம் கன்மத்தை அளவுபடுத்தவும், நியதி தத்துவம் கன்மத்தை நியமித்து நிறுத்தவும் முற்பட்டு நிற்கும் என்றும்; கர்ல்தத்துவம் ஆன்மாவினது கிரியா சக்தி யையும், வித்தியாதித்துவம் ஆன்மாவினது ஞான சக்தி யையும் அராக தத்துவம் ஆன்மாவினது இச்சா சக்தியை பும் எழுப்பும் என்றும் மேலே கூறியவற்றை நினைவித் கெர்ள்க. இந் நிலையில் ஆன்மா கன்மத்தை நுகரவும் சட்டவும் தகுதி பெற்று நிற்கும். ஆகவே, ஆன்மா கன் மத்தை நுகர்தல், ஈட்டல்கட்குக் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்தும் இன்றியமையாதன வாய் ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காது சட்டைபோல்