பக்கம்:சைவமும் தமிழும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சைவ சமய விளக்கு ஒன்றாய் ஒட்டியே கிடக்கும். இதனால் இவ்வைந்தும் பஞ்ச கஞ்சுகம்’ என்று வழங்கப்பெறும், கஞ்சுகம்-சட்டை. புருடன் : இங்ங்ணம் பஞ்ச கஞ்சுகத்தை எய்திய உயிர் பின் இவற்றிற்குக்கீழ் உள்ள மூலப்பிரகிருதியைப் பற்றிய வழியன்றிப் போகம் நுகர்தல் கூடாமையின் இங்ங்ணம் அதனைப் பற்றும் நிலை புருடதத்துவம்’ என ஒரு தத்துவ மாகக் கூறப்படுகின்றது. இஃது ஒரு தனித் தத்துவம் அன்று என்பதை நினைவில் கொள்க. இது பிரகிருதியின் தொடர்பால் உண்டாவதாயினும், பிரகிருதியின் காரியங் கள் தோன்றாத முன்னர் நிற்கும் நிலையாதலின், அசுத்த மாயாதத்துவங்களுள் வைத்துக் ஆப்பெறுகின்றது. போகத்தை துகரும் தன்மை உட்ைமையந்திருட்ன்' என்ற பெகர் ஏற்பட்டது என்பதை அறிக. போகத்தை நுகர் வோனாந்தன்மை போத்திருத்துவம் என வழங்கப்பெறும். பிரகிருதிப்ர்ன் தொடர்பு சகலர்க்கன்றிப் பிரளய கலர்க்கு இன்மையால், புருடதத்துவமாய் நிற்றல் சகலர்க்கன்றிப் பிரளயாகலர்க்கு இல்லை என்பதை அறிந்து தெளிக. காலம் முதலிய ஐந்துடன் புருடன்’ என்பதைக் கூட்ட அசுத்தமாயாதத்துவம் ஆறாகும். மாயை. முதற்கண் குறிப்பிட்ட மாயை என்ற தத்துவம் ஏனையவை போல காரியப் படாமையால் அதனை இறுதிக் கண் வைத்துக் கூறுவது மரபு. இதனுடன் சேர்ந்து அசுத்தமாயா தத்துவங்கள் ஏழாகின்றன. - காலம் முதலிய வித்தியா தத்துவங்கள் ஏழும், மூலப் பிரகிருதியும் உயிர்கட்கு அதிசூக்கும் உடம்பாய் நின்று உதவும். அதிசூக்கும் சரீரம்", பரசரீரம் ஒன்றையே குறிக் கும் சொற்களாகும். பரசரீரத்துள் மாயாதத்துவம் காரண சரீரம் என்று வழங்கப்பெறும். காலம் முதலிய ஐந்தும் கஞ்சுக சரீரம்" என்றும், மூலப்பிரகிருதி குணசரீரம்" என்றும் பெயர் பெறுகின்றன. இவற்றுள் குணசரீரம் சகலர்க்கன்றிப் பிரளயாகலர்க்கு இல்லை. எனவே