பக்கம்:சைவமும் தமிழும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசு இயல் - 237 ° பிரளயா கலர், காரணசரீரம், கஞ்சுகசரீரம் என்னும் இரண் டேயாகிய பரசரீரத்தானே அசுத்தமாயாதத்துவ புவனங் களில் உள்ள போகங்களை நுகர்வர். ஆகவே, அசுத்த மாயாதத்துவங்களாகிய வித்தியாதத்துவங்களே பிரளயா கலர்க்கு இனுகரண புவனபோகங்களைத் தருகின்றன என் பதை அறிக. வித்தியா தத்துவம் ஏழனுள் கால தத்துவத்தில் இரண்டு புவனங்களும், நியதி தத்துவத்தில் ஐக்து புவனங்களும். கலாதத்துவத்தில் இரண்டு புவனங்களும், வித்தியாதத்து வத்தில் இரண்டு புவனங்களும், அராக தத்துவத்தில் ஐந்து புவனங்களும், புருடதத்துவத்தில் ஆறு புவனங்களும் மாயாதத்துவத்தில் ஐந்து புவனங்களும் உள்ளன என்று சைவாகமங்கள் கூறும். இங்குப் புருடதத்துவம் என்பது. அதற்குக் காரணமான மூலப் பிரகிருதியை. மேற்கூறிய வித்தியாதத்துவங்கள் ஏழனையும் தெளி வாக உணர்ந்திருப்பாய் என்று கருதுகிறேன். அன்பன், கார்த்திகேயன். 32 அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலன் விளைவதாகுக. இக்கடிதம் த்ொடங்கி ஒன்றிரண்டு கடிதங்களில் ஆன்மதத்துவம்’பற்றி விளக்குவேன். அராக தத்துவம் தோன்றிய பின்னர், முன் கூறிய கலை’ என்ற தத்துவத். திணின்றும் நேரே மூலப்பிரகிருதி தோன்றும். இதுவே: ஆன்மதத்துவங்கள் அனைத்திற்கும் மூலகாரணமாகும். இதனால் இதுவும் ஒரு மாயையாகச் சொல்லப்படுகின்றது. எனினும், இது காரணமாய் நில்லாது, 'கலை என்னும்