பக்கம்:சைவமும் தமிழும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிக் இயல் 23癸 உடும் அந்தக் கரணமாய் நிற் கும். அந்தக் கரணம் அகக் கருவி, நன்கு தெரிந்த ஒன்றை மீள மீளச் சிந்திப்பதனா லேயே இன்பமும் துன்பமும் உண்டாகின்றன. எனவே, ஆன்மாவின் தன் வேதனைக் காட்சிக்கு இச்சித்தமே கருவி கயாதல் தெளிவாகும். புத்தி: குணதத்துவத்தின் ஒரு கூற்றில் சாத்விக குணம் மிக உடையதாய்ப் புத்தி என்னும் அந்தக்கரணம் பரிண மித்துத் தோன்றும், இஃது ஆன்மா தான் ஐயுற்று நின்ற ஒன்றை இன்னதே எனத் திட்டமாகக் துணிதற்குக் கருவி யாய் நிற்கும். புத்திதத்துவம் இல்லையேல் ஒரு,பொருளை 'இன்னது எனத் திட்டமாக உணரும் உணர்வு உண்டாகாது. இந்த உணர்வு சவிகற்ப ஞானம்' எனப் பெயர் பெறும், சவிகற்பமாக உணரும் சிறப்புணர்வு புத்தி தத்துவத்தால் உண்டாவதால், அதுவே பின், துணியப்பட்ட அந்தப் பொருள் வடிவாய்த் திரிந்து (பரிணமித்து) நிற்கும். இதனால் உயிர்-ஆன்மா-நேரேபற்றி அநுபவிப்பது புத்தி' தத்துவத்தையே பன்றிப் புறப் பொருளையன்று. எனவே புறத்தில் உள்ள பொருள்கள் கண் முதலிய பொறிகள் வாயிலாகவும், பின் மனத்தின் வழியாகவும் புத்தியைத் திரிவுபடுத்தி நிற்பனவேயன்றி உயிரால் நேரே அநுபவிக்கப் படுதல் இல்லை என்பதை உணர்க. காரணத்தில் உள்ளது காரியத்திலும் உளதாகும் என்பதை நீ அறிவாய். எனவே, குணதத்துவத்தினின்றும் தோன்றிய புத்தி தத்துவத்திலும் முக்குணங்கள் உளவாகும். இதனால் அவற்றின் காரியமாகிய கொள்கைகள், பலவும் இப்புத்தியின் கண்ணே தோன்றும். அவை பாவகம் எனப் படும். புத்தியில் தோன்றும் பாவகங்கள் அளவிறந்தன வாயினும அவற்றை எட்டாகத் தொகுத்துக் கூறுவுர் சித்தாந்திகள். இவற்றுள் தன்மம், ஞானம், வைராக்கியம். ஐசுவரியம் என்னும் நான்கும் நல்லவை யாகும். இவற்றின் 60 பெயர் முதலிய பாகுபாடுகளோடு கூடிய ஞானம்.