பக்கம்:சைவமும் தமிழும்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*40 சைவ சமய விளக்கு மறுதலையாகிய அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் என்னும் நான்கும் தீயவையாகும். தன்மம் முதலிய நல்லவை நான்கும் ஒன்றன்பின் ஒன்றாகக் காரண காரிய முறையில் தோன்றி ஐசுவரியம் வத்தீவுடலி அதன் மம் முதலிய தீயவை நான்கும் ஒன்றின் பின் ஒன்றாக அவ்வாறு தோன்றி அநைகவரியம் வந்து நிற்கும். அநை. சுவரியம் வந்தபின் முன்போலவே தன்மம் என்னும் நல்லது. தோன்றும். இப்படியே இப்புத்தி தத்துவம் ஒரு சக்கரம் போல் சுழல, இப்பாவகங்கள் அச்சக்கரத்திலுள்ள ஆரைக் கால்கள் ಟ್ವೆ-ಸ್ತು விரைவாக மாறி மாறி வருதலின் உயிர் இப்பாவகித்தில் அழுத்தி இன்பம், துன்பம், மயக்கம் (சுகம். துக்கம், ம்ோகம்) என்பவற்றை அடையும். அளவிலாப் பாவகத்தால் அழுக்குண்டு." என்ற மணிவாசகப் பெருமாளின் வாக்கு ஈண்டு திணைக்கத். தக்கது. இப்பாவகங்களில் நல்லவை நான்கும் சாத்துவிக குணத்தால் உளவாவனவாகும். அவைராக்கியம் ஒன்றே: இராசத குணத்தால் உளதாவது. ஏனைய மூன்றும் தாமத. குணத்தால் உளவாவன. சாத்துவிகத்தால் இன்பமும், இராசதத்தால் துன்பமும் தாமதத்தால் அவ்விரண்டுமின்றி விருக்கும் மயக்கமும் உள்ளனவாம் என்பதை அறிக. அகங்காரம்: புத்தி தத்துவத்தினின்றும் இராசதகுணம் மிக்குடைய அகங்காரம் என்னும் தத்துவம் தோன்றும், இஃது ஆன்மா யான் இதனைச் செய்வேன்’ என்று ஆகங்: கரித்து எழுச்சி யுறுதற்குக் கருவியாகும். எனவே, இக்கருவி இல்லையாயின், உயிர் எந்த ஒரு செயலிலும் செல்லுதற்கு எழுச்சியற்றதாகிவிடும். இது சாத்துவிக அகங்காரம், இராசத அகங்காரம், தாமத அகங்காரம் என மூன்றாகி நிற்கும். இவற்றுள் சாத்துவிக அகங்காரம் தைசதாகங்காரம் என்றும், இராசத அகங்காரம், வைகாரிகாகங்காரம் என்றும், 1ே. திருவா. கண்டபத்து.8