பக்கம்:சைவமும் தமிழும்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 24 தாமத அகங்காரம் பூதாதி அகங்காரம் என்றும் பெயர் களைப் பெறும். - X மனம்; இந்த அந்தக்கரணம் தைசதாகங்காரத்தின்று முதற்கண் தோன்றும். இது புறக் கருவிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளால் கவரப் பெற்ற ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை' என்னும் புலன்களை' ஆன்மா பற்றுதற்கும், பின் புத்தி தத் துவத் தால் அறுதியிடப்பெற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுதற்கும் உரிய கருவியாகும். முன்பு புத்தி தத்து வத்தால் அறுதியிட்டு அறியப்பட்ட பொருளின் பெயர், சாதி, குணம், கன்மம், உடைமை என்பவற்றின் நினைவு மனத்தின்கண் தங்கிக் கிடப்பதால், அப் பொருளேயாயி னும், அதனோடு ஒருங்கொத்த அவ்வினப் பொருளாயினும் மீளவும் புறக்கருவிகட்குப் புலஞ்கும்பொழுது , இஃது இன்ன பொருள் போலும் எனப் பொதுவாக நினைத்தும், வின், இஃது இப்பொருள்தானோ, அன்றோ?' என ஐயுற்றும் நிற்கும். இஃது இன்ன பொருள் போலும் எனப் பொதுவாக நினைத்தல் 'சங்கற்பம்' என்றும், அஃது ஆமோ, அன்றோ?' எனக் கவர்த்து நிற்கல் விற்கபம்’ என்றும் வழங்கப்பெறும். இவற்றுள் பின்னதே ஐயம்: என்றாலும், முன்னதும் ஐயத்தின்பாற் பட்டதேயாகும். ஆகவே, சங்கற்ப விகற்பங்களால் ஐயுற்று நிற்கும் கருவி மனமே என்பதும், மனம் இங்ங்ணம் பற்றி நின்று ஐயுற்ற பொருளைப் பின்னர் புத்தி இன்னதெனத் துணியும் என்துக் ஈண்டு நீ அறிந்து தெளிய வேண்டியவை. . இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ உளங் கொள்ளல் வேண்டும். முன்னர் அறியப்பட்ட பொருளே பின்னர்க் 62. வட மொழியில் பரிசம், ரசம், ரூபம், கந்தம், சத்தம் எனப் படும். 68. புலன்களை வட மொழியி விஷயங்கள் என்று வழங்குவர். . . . சை, ச. வி.-16 蕊