பக்கம்:சைவமும் தமிழும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 243 ஒர் ஒளி, இஃது ஒரு சுவை, இஃது ஒரு நாற்றம்’ என்றாற் போலப் பொதுமையில் அறிவதே பொதுவாக அறிதலாகும். இவ்வாறு அறியும் அறிவு கிரு விகற்பம் ஞானம்" என்று வழங்கப்பெறும். நிரு விகற்பம்-வேறுபாடு இன்மை, செவி முதலிய பொறிகள் புறப் பொருள்களைப் பொதுவாக அறியுமேயின்றிச் சிறப்பாக அறியமாட்டா. மனம் முதலிய அந்தக்கரணங்கள் செயற்பட்ட பின்னர்தான் சிறப்பாக அறிதல் நிகழும். ஒசை முதலிய ஐந்தும்" செவி முதலிய பொறிகட்குப் புலனாகுமிடத்து புலன் எனப் படும். புலன்களை விடயம்-விஷயம் என்பர் வடநூலார், செவி முதலிய ஐந்தும் அறிதற் கருவியாதல்பற்றி ஞானேங் திரியம் என்று வழங்கப்பெறுகின்றன. இவை தமிழில் மெய், வாய், கண், செவி, மூக்கு என்னும் முறையிலும், இவற்றின் செயல்கள் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறிதல்" என்னும் முறையிலும் ஏற்றபெற்றியால் கூறப்பெறினும், இவற்றின் தோற்றமுறை மேற்கூறிய வாறேயாகும். செவி முதலியன தத்துவத்தின் பெயரா ப் நிற்குமிடத்தில் புறத்தில் காணப்பெறும் உறுப்பைக் குறி யாமல், அவ்விடங்களிலிருந்து கேட்டல் முதலியவற்றைச் செய்யும் ஆற்றல்களையே குறிக்கும் என்பதை உணங் கொள்க. - கன்மேந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள் தைசதா கங்காரத்தினின்று தோன்றியபின் வைகாரிகாகங்காரத்தி னின்றும் வாக்கு, பாதம், பாணி, பாபு. உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். தமிழில் இவை மொழி, கால், கை, எருவாய், கருவாய் என்று வழங்கப்படும். இவையும் தத்துவங்களாகப் பேசப்படுமிடத்து நா முதலிய இடங்களில் நின்று பேசுதல் முதலிய செயல்களைச் செய்யும் 65. இவை முறையே வட மொழியில் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என வழங்கப்பெறும். ேே, குறள்-1101