பக்கம்:சைவமும் தமிழும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔喀邻 சைவ சமய விளக்கு ஆற்றவையே குறிக்கும் என்பதை உளக்கொள்க. முறையே: ஒவ்வொன்றாகத் தோன்றும் வாக்கு முதலிய ஐந்தும் மொழிதல், புடை பெயர்தல், இடுதல்-ஏற்றல், கழிப்பன கழிதல், இனப் பெருக்கம் செய்தல் என்னும் தொழில்களைச் செய்யும். இவ்வைந்தும் முறையே வசனம், கமனம், த்ன்னம், விசர்க்கம், ஆனந்தம் என்று வடமொழியில் கூறப்பெறும்" எனவே, வசனம் முதலிய ஐந்தும் கன்மேந்திரியங்களின் விடயம்-புலன் என்பது தெளிவாகும். வாக்கு முதலிய ஐந்தும் தொழில் செய்வதற்குக் கருவியாதலின், கன்மேக் திரியம் என வழங்கப்பெறுகின்றன என்பதை உளங். கொள்க. தந் மாத்திரைகள் ஐந்து தாமதாகங்காரமாகிய பூதாதி யகங்காரத்தினின்தும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் தந்மாத்திரைகள் ஐந்தும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். பூதங்கட்கு முதற் காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதியகங்காரம்' எனப் பெயர் பெற்றது என்பதை அறிக. பூதங்கள் ஐந்து என்பதும், அவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பதும், தமிழில் அவை நிலம், கீர், தீ,வளி, விசும்பு என்று வழங்கப் படும் என்பதும் நீ அறிந்தவையே. இங்குக் கூறிய முறை ஒடுக்க முறைபற்றியதாகும். தோற்றமுறையில் அவை ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி என்னும் முறையில் அமையும். பூதங்கள் ஐந்தும், அவற்றின் செயல்களும் ஒரு வசற்றாந் புலனாவன. ஆதலின் அவை "துரலப்பொருள்கள் என்பது தெளிவு. குக்குமமாகிய காரணத்தினின்றும் துால மாகிய காரியம் தோன்றுங்கால், தேரே தூலமாய்த் தோன்றாது. முதற்கண் ஒருவாற்றாற் சூக்குமமும், ஒரு வாற்றால் துலமுமாய நிலையில் தோன்றி அதன் பின்னரே துரலமாய்த் தோன்றுவதாகும். துரலமாகிய ஆகாயம் ஆதிதலிய பூதங்கள் ஐந்தும் பூதாதியகங்காரத்தி னின்றும் நேரே அங்ங்ணம் தோன்றாமல் முதற்கண் தக் மாத்திரை வடிவில் தோன்றிய பின்னரே பூதவடிவில்