பக்கம்:சைவமும் தமிழும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 245 தோன்றுவனவாகும். பூதங்களின் சூக்கும நிலையே தந் மாத்திரையாதல் பற்றி அவை சூக்கும் பூதம் எனவும் வழங்கும். அதனால் பூதங்களைத் தூல பூதம் எனவும், மகா பூதம் எனவும் வழங்குவர். எனினும் பூதம் என்பது துால நிலைக்கே உரிய பெயராதல் அறிக. சூக்கும பூதங்கள் தக் மாத்திரை என்றே கூறப்பெறும். இவ்விடத்தில் ஒன்றை நீ துணுகி உணர்தல் வேண்டும். பூதங்கட்கு முதற் காரணமாய்ச் சூக்கும நிலையில் நிற்கும் இத் தந்மாத்திரைகளின் பெயரே, பூதங்களின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாகும் ஐம் புலன்கள் (அல்லது விடயங்கட்குப்) பெயராய் நிற்கும். அதனால் இவ் விரண்டையுமே ஒன்றே என மயங்காது வேறு வேறு என்று உணர்ந்து தெளிக. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய தந் மாத்திரைகள் ஐந்தும் முறையே ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனத் தமிழில் வழங்கப் படும் என்பதையும் அறிக. இனி, தக்மாத்திரை' என்பதன் பொருளையும் அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இதன் பொருள் *அதனளவாய் கிற்றல்' என்பது. அதாவது வேறொன் றோடும் கூடாது தனித்து நிற்றல்’ என்பதாகும். ஒரு பொருள் வேறு எப்பொருளோடும், எவ்வாற்றாலும் தொடர்பு படாது தனித்து நிற்றலைக் கேவலம்’ என்றும் , அவ்வாறின்றி எவ்வாற்றாலேனும் பிறவற்றோடு தொடர் புற்று நிற்றலை விசிட்டம்’ என்றும் கூறுவர் வடநூலார். இவை முறையே தனி கிலை தொகை நிலை என்று தமிழில் வழங்கப்பெறும். இவற்றுள்ள தனி நிலை அல்லது கேவலம் என்பதே 'தந் மாத் திரை' என்பதன் பொரு ளாகும். இக் காரணப் பெயர் வேறு சிலவற்றிற்கும் பொருந்துமாயினும், காரண இடுகுறிப் பெயராய் குக்குமப் பூதங்களையே குறிக்கின்றது என்பதையும் அறிக. துரல பூதங்கள் விசிட்டமாய் நிற்றலின், சூக்கும பூதங்கள் கேவலமாய் நிற்கும் என்பதையும் உணர்ந்து தெளிக.