பக்கம்:சைவமும் தமிழும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2患懿 சைவ சமய விளக்கு இறுதியில் கூறிய கருத்தை மேலும் தெளிவாக்குவேன், ஆகாயம் "சத்தம்’ என்னும் ஒரு குணமே உடையது. வாயு சத்தத்தோடு பரிசம்’ என்னும் குணத்தையும் உடையது. தேயு அவ்விரண்டனோடு உருவம்' என்பதுடன் மூன்று குணத்தையுடையது. அப்பு இம் மூன்றனோடு இரதம்" என்ற குணமும் சேர்ந்து நான்கு குணத்தை யுடையது. பிருதிவி சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் ஐந்து குணங்களையும் உடையது. இவற்றுள் ஒன்றின் ஒன்று ஏற்றமாக உடைய குணம். அவ் வப்பூதங்கட்குச் சிறப்புக் குணமாகும். இதை விளக்கமாகக் கூறினால்: வாயுவுக்குப் பரிசமும், தேயுவுக்கு உருவமும், அப்புவுக்கு இரதமும், பிருதிவிக்குக் கந்தமும் சிறப்புக் குணங்களாகும்: இச் சிறப்புக் குணங்கள் துல பூதங்களின் பலவகை வேறு பாட்டுடன் காணப்படும். அவ் வேறுபாடுகளை யுடையதசம் இருத்தலே 'விசிட்டம்’ என்றும், அவ்வாறின்றிப் பொதுமை யில் நிற்பதே கேவலம்’ என்றும் அறிக. இதனை மேலும் தெளிவாக்குவேன். ஆகாயத்தின் குணமாகிய சத்தம் வல்லோசை, மெல்லோசை, இடையோசை எனப் பலவாறு காணப்படும். ஆகவே, தனது சத்த குணம் வன்மை, மென்மை, இடைமை என்பவற்றோடு கூடிப் புலனாகி நிற்றலே விசிட்டமாய் நிற்றலாகும். அதனால் அவ் வேறுபாடின்றி ஓசை எனப் பொதுமையில் நிற்பதே கேவலம். இந் நிலையே சத்த தந் மாத்திரை’ என்பது என்று தெளிக. - இவ்வாறே வாயுவின் சிறப்புக் குணமாகிய பரிசம் வாயுவினிடத்தில் தட்பம், வெப்பம் முதலாகப் பல்வேறு வகையாயும் தேயுவின் குணமாகிய உருவம் தேயுவினிடத். தில் செம்மை, கருமை, வெண்மை, பசுமை, பொன்மை முதலாகப் பல்வேறு வகையாயும், அப்புவின் சிறப்புக் குணமாகிய இரதம் அப்புவினிடத்தில் இனிப்பு, கசப்பு. புளிப்பு முதலாகப் பல்வேறு வகையாயும், பிருதிவியின் சிறப்புக் குணமாகிய கந்தம் பிருதிவியினிடத்தில் சுகந்தம்,