பக்கம்:சைவமும் தமிழும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 24ኘ துரக்கந்தம் என இருவேறு வகைப்பட்டுப் பல வாயும் காணப்படும். இவை இங்ங்ணம் வேறுபட்டு வெளிப்பட திற்கும் நிலையே அவ்வப் பூதங்கள் விசிட்டமாய் நிற்கும் நிலையாகும். அவ்வாறின்றிப் பொதுமையில் பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் அளவாய் நிற்றலே 'தத்மாத்திரை’ என உணர்ந்து தெளிக, இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். சத்த தந்மாத்திரை. பரிச தந்மாத்திரை’ உருவ: தந்மாத்திரைஎேனவழங்குதலபற்றி அத்தந்மாத் திரை ஒவ்வொன்றும் சத்தம் முதலிய ஒவ்வொன்றாகவே நிற்கும் போலும் என மயங்குதல் கூடாது. ஏனெனில் சத்தம் ஒழிந்த ஏனைய நான்கு தந்மாத்திரைகளும் பூதங் களில் சொல்லியதுபோல அமைந்து, அதனதன் சிறப்புக் குணம்பற்றிப் பரிச தந்மாத்திரை, உருவ தந்மாத்திரை, இர ததந்மாத்திரை, கந்ததந்மாத்திரை எனவழங்கப் படுகின்றனவாதலின். எனவே, யூதாதிய கங்காரத்தி னின்று தந்மாத்திரைகள் தோன்றுங்கால் முதற்கண் சத்தம் ஒன்றேயாய்ச் சத்தி தந்மாத்திரை தோன்றும், அதன்பின், சத்தத்தோடு கூடப் பரிச தந்மாத்திரை தோன்றும். அடுத்து, உருவ தந்மாத்திரையும், அதனை யடுத்து இரததந்மத்திரையும், அதன்பின் கந்ததந்மாத் திரையும் முன் பின் தோன்றிய குணங்களோடு கூடியே தோன்றும். ஆகவே, இம்முறையில் நோக்கும்பொழுது சத்த தந்மாத்திரை ஒன்றே கேவலம்' என்றும் ஏனைய நான்கும் விசிட்டம்’ என்றும் தெளிவாகின்றதன்றோ? இறுதியாகப் பிறிதோர் உண்மையையும் கூறி இக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன். காரியத்தில் உள்ளது காரணத்திலும் உளதாகும்’ என்பதை நீ நன்கு அறிவாய் எனவே, பூதங்களில் பல வகை வேறுபாட்டோடு துரல மாய்க் காணப்படும் குணங்கள் அப்பூதங்கட்குக் காரண மாகிய தந்மாத்திரையிலும் வேறு பாடின் றிச் சூக்குமாய்க் கிடத்தல் வேண்டும். அவ்வாறில்லையேல் ஒரேவொரு