பக்கம்:சைவமும் தமிழும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சைவ சமய விளக்கு தத்துவங்கள் முப்பத்றாறும் தோன்றுங்காலத்து இம் முறையே தோன்றுதலின். ஒடுங்குங் காலத்திலும் இம் முறையே ஒடுங்குவனவாகும் என்பதை அறிக. இத்தோற்ற: ஒடுக்கங்களை இறைவன் நேரேயும், பிறர்வாயிலாகவும் நின்று செய்விக்க நிகழ்வனவன்றித் தாமே நிகழமாட்டா என்பதை நினைவில் இருத்துக. "அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பொதுமக்கள் வாக்கில் நிலவும் பழ: மொழியின் உண்மையும் இத்தத்துவத்தை உணர்த்துவதை ஒர்ந்து உளங்கொள்க. தத்துவம் முப்பத்தாறனுள் சுத்தமாயையின் காரியமாகிய சிவ தத்துவம் ஐந்தும் இறைவனுக்கு இடமாகி தின்று தமக்குக் கீழ்உள்ள தத்துவங்களை இயக்கி நிற்ப தால் அவை பிரேரக காண்டம்’ எனப்படும். அசுத்த மாயா காரியங்கள் ஏழும் ஆன்மாவைப் போகம் நுகர் தற்குத் தகுதி செய்தலின் இவை போசயித்திரு காண்டம்" என வழங்கப்பெறும். பிரகிருதியின் காரியங்களாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் முக்குண வடிவாய் ஆன்மாவிற்கு நுகர்ச்சியைத் தருதலின் இவை போக்கிய காண்டம்’ என்று நுவலப்பெறும். பிரேரக காண்டமாகிய சிவ தத்துவங்கள் ஐந்தும் ஆன வத்தோடும் கன்மத்தோடும் கலவாது நிற்றலால் சுத்தம். போசயித்திரு காண்டமாகிய வித்தியா தத்துவங்கள் ஆன வத்தோடும், கன்மத்தோடும் கலந்திருப்பினும், குண ரூபமாய் நில்லாமையால் ஓரளவு தூயதேயாகலின், 'மிச்சிரம்’ எனப்படும். போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்கள் ஆணவத்தோடும் கன்மத்தோடும் கலந்து முக்குன ரூபமாய் நிற்றலின் அசுத்தம்’ என்று சொல்லப் உடும், மூவகை உயிர்களுள் "விஞ்ஞான கலர்' எனப்படும் ஒரு மலம் உடைய உயிர்கட்கு வரும் தனு, கரண, புவன போகங்கள் சுத்தமாதலால் அவையெல்லாம், சுத்ததத்து வங்களினின்றும் தோன்றுவனவே; அதனால் விஞ்ஞான