பக்கம்:சைவமும் தமிழும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 25 : கலரது சரீரங்கள் வைந்தவ சரீரமாகும். வைந்தவம், விந்துவின் காரியம். பிரளயாகலர்' எனப்படும் இருமலம் உடைய உயிர்கட்கு வரும் தனு, கரண, புவன, போகங்கள் மிச்சிரமாதலால் அவையெல்லாம் வித் தியா தத்துவகளி னுன்றும் தோன்றுவதுவாகும். அதனால் பிரளயாகலரது சரீரங்கள் மாவையுேம் சரீரம் ஆகும். மாயேயம்-மாயை. யின் காரியம். சகலர்' எனப்படும் மும்மலம் உடைய உயிர் கட்கு வரும் சரீரம் அசுத்தமாதலால் அவையெல்லாம் ஆன்ம தத்துவத்தினின்றும் தோன்றுவனவாகும். அதனால் சகலரது சரீரங்கள் பிராகிருத சரீரமாகும். பீராகிருதம்பூமியின் காரியம். சகலரை ஒழிந்த ஏனை இருதி றத்தாரின் சரீரங்களும் பிரகிருதியோடு தொடர்பின்மையால் அவை உயிரண்டும் அப்பிராகிருதம்-பித்தின்யுடன் தொடர்பில்லா தவை’ என்பதை அறிந்து தெளிக். பிரகிருதியின் காசியங்களே முக்குணவடிவாய் நின்று. மயக்கத்தைச் செய்தலின் அவை இல்லாதவர்கட்கு. மயக்கம் இல்லை. மயக்கம் என்றால் என்ன? எல்லாம் முதல்வன் செயலேயாய் இருக்க அதை உணராது. எல்லாச் செயல்கட்கும் தம்மையும் பிறரையுமே தலைவராக நினைந்து, செருக்கும் பகையும் கொள்ளுதலாகும். இது *யான் எனது என்னும் செருக்கு என்று வழங்கப்படும். இது நிலவுலகில் உள்ள மக்கட்கே யன்றி வானுலகில் உள்ள தேவர்கட்கும், அவர்கட்குத் தலைவராகிய இந்திரன் அயன் மால் என்பவர்கட்கும் உள்ளது. எனவே, அவர்களும் பிராகிருதந்ேதன்றிச் சகலரே யாவர். எனவே மக்களே பன்றித் தேவரையுள்ளிட்ட ஏனை அறுவகைப் பிறப்புக் களும் பிராகிருதமேயன்றி. ஒன்றேனும் அப்பிராகிருத மன்று என்பதையறிக. இதனால் அயன்மால் உள்ளிட்ட தேவர் முதலிய பலரும் முக்குண வயத்தராய் யான் எனது என்னும் செருக்குற்று, இன்பம் துன்பம் மயக்கம் என்ப வற்றுள் அழுந்தி, மகிழ்ச்சி, வாட்டம், மடி என்பவற்றை யும், பொறுமை, பொறாமை, புறக்கணிப்பு முதலியவற். றையும் உடையவர்களாவர் என்பதையும் தெளிக.