பக்கம்:சைவமும் தமிழும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சைவ சமய விளக்கு யான் என தென்னும் செறுக்கறுப்பான் வானோர்க் (கு) உயர்ந்த உலகம் புகும் " என ஞானம் பெற்றோரைத் தேவரினும் மேம்பட்டவர் எனக் கூறியதன் நுட்பத்தையும் உணர்ந்து தெளிக. இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. தேவர்களேயன்றி. பிரமன், மால், உருத்திரன் என்னும் முக்குணக் உடைய சகலரேயெ னினும், அவருள் உருத்திரன் பக்குவம் எய்தின வன். இவன் சிவபெருமானை வழிபட்டு இப் பெருமானது உருவத்தையும் தொழிலையும் பெற்று திற்பவன். அதனால் இவன் ஏனைய இருவரினும் மேம் பட்டு மயக்கமின்றி இருப்பான், இங்ங்ணம் மூவரும், தேவரும் முதலாக உள்ள சகலவர்க்கமாகிய ஆன்மாக்கட் கெல்லாம் சீகண்ட உருத்திரரே தலைவர். இவர் மூவருள் ஒருவனாகிய குணிருத்திரனைப் போலச் சகலராகாதவர். பிரளராகலருள் பக்குவம் எய்திப் பரமசிவனை யுணரும் ஞானத்தைப் பெற்று அப்பெருமானது திருவுளக்குறிப்பின் வழி நான்கு தோள்கள், முக்கண், கறைமிடறு, மான், மழு இவற்றையுடையவர். இவர் பிரகிருதி புவனங்கட்கெல் லாம் தலைமை எய்தி, முவரும் தேவரும் முதலிய சகல வர்க்கத்தினர் அனைவரையும் ஆளும் தகைமையுடையவர். அதனால் இவர் வழி நிகழும் செயல்கலொல்லாம் பரம சிவனது செயல்களாய் நிற்கும் என்பதை உளங்கொள்க. இது பற்றியே இவர் அவ்வவ் அவதாரங்களில் கொண்ட மூர்த்தங்கள் பலவும் மாகேசுர மூர்த்தங்கள்’ எனவழங்கப் பெறுகின்றன என்பதையும் அறிக. இவருக்குத்தோற்றமும் ஒடுக்கமும் ஆகிய இடம் மாயாதத்துவ மேயாயினும், புருட தத்துவத்தில் நின்று பிரகிருதி புவனங்களையெல் லாம் ஆளுவர். இவர் புருட தத்துவத்தை இதயம் போலவும், அவ்யக்தமாகிய பிரகிருதியை இடப்பாதி 68. ருறன்-346