பக்கம்:சைவமும் தமிழும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பtச இயல் 253 போலவும். வியக்தமாகிய குணதத்துவத்தை வலப்பாதி போலவும் அதிட்டித்து நின்று அவற்றில் முறையே: உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகளைத் தோற்றுவிப்பர். அதனால் இம் மூவர்கட்கும் இத் தத்துவங்களே தோற்றமும் ஒடுக்கமுமாகிய இடமாகும். சிவபெருமானது வலப்பாகத் தில் பிரமனும் இடப்பாகத் தில் மாயோனும், இதயத்தில் உ ரு த் தி ர னு ம் தோன்றினர் என்று புராணங்களிலும் கூறப் பெறு வதற்கு இதுவே கருத்தென்பதை அறிக. குண வேறு பாடு தோற்றாமையின் அவ்யக்தமே மாயோன் பள்ளி கொள்கின்ற 'பாற்கடல்’ என வழங்கப் பெறுகின்றது என் பதையும், அவனது உறங்குதல்’ என்பது அவ்யக்கத்தில் நிற்றலையே குறிக்கும் என்பதையும் அறிந்து தெளிக. குணதத்துவம் பிரகிருதியின் தத்துவங்கள் அனைத்தையும் தோற்றுவிக்கும் நிலையில் வியக்தமாய் நிற்றலால், அதன் கண் தோன்றி நிற்கும் பிரமன் நாற்றத்தையுடைய மலரின்கண் தோன்றி அதன்கண்ணே வீற்றிருல்பவனாகச் சொல்லப்படுகின்றான். பிரமன் தோன்றி வாழும் தாமரை மலர் மாயோனது உந்திக் கமலம் எனப்படுவதும், குணத் தத்துவம் பிரகிருதியினின்றும் நேரே தோன்றும் காரிய மாதல் பற்றியே யாகும் என்பதையும் அறிக. மூலப்பிரகிருதி மிகவும் தூலம் என்பதையும், அசுத்து. மாயை தூலம் என்பதையும், சுத்தமாயை சூக்குமம் என்பதையும் இப்போது நீ நன்கு அறிந்திருத்தல்வேண்டும். குக்குமத்தில் துலம் வியாப்பியம் (உள்ளடக்கம்). ஆதலின், சுத்தமாயை. வியாபகமும் அசுத்தமாயை அதில் வியாப்பியமும் ஆகும். பிரகிருதி மாயை அசுத்த மாயையின் காரியமேயாதலின், அஃது அசுத்தமாயையில் வியாப்பியம். என்பது தானே போதரும். சூக்குமமும் வியாபகமுமாகிய பொருள் மேலே உள்ளது என்றும், தூலமும் வியாப்பியமு. மாய பொருள் "கீழே உள்ளது' என்றும் சித்தாந்தம் கூறும், காரணம், சூக்குமமாதவின் அது மேலே உள்ளதும் காரியம்.