பக்கம்:சைவமும் தமிழும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

您莎海 சைவ சமய விளக்கு துலமாதலின் அது கீழே உள்ளதும் ஆகும் என்பதை அறிக. எனவே, தத்துவங்களில் முன்னர்த் தோன்றியது மேலே உள்ளதும், பின்னர்தி தோன்றுவது கீழே உள்ளதும் ஆதல் தெளிக. இம்முறையில் பிருதிவி என்னும் தத்துவமே எல்லாவற்றிலும் கீழ் உள்ளது என்பதும், சிவம் என்னும் தத்துவம் எல்லாவற்றிலும் மேல் உள்ளது என்பதும் அறிந்து தெளியத் தக்தது. சிவ தத்துவம் நாதம் என்றும் சொல்லப் படுதலின், "காதாந்தம்’ என்பது முப்பத்தாறு தத்துவங்களும் கடந்த நிலை என்பது விளங்கும். இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் வேண்டும். தத்துவங்களின் முறை தோற்ற முறை (உற்பத்திக் கிரமம்), ஒடுக்க முறை (சங்காாக் கிரமம்) என இருவகையாகப் பேசப்பெறும், தோற்ற முறையில் சிவ தத்துவத்தை முதலாக வைத்து எண்ணுதலும், ஒடுக்க முறையில்,திருதிவியை முதலாக வைத்து எண்ணுதலும் முறைக ஆதி இருந்து வருதலை அறிந்து கொள்க. மற்றும், ஒர் உண்மையையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. தத்துவங்கள் முப்பத்தாறும் ஆன்மாக்கட்கு துால சரீரம், சூக்கும் சரீரம், பரசரீரம் (பரம்-அதிசூக்குமம்) என மூவகை உடம்பு களாகப் பொருந்தி நிற்கும். பூதங்கள் ஐந்து, கன்மேத்திரி யம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களும் துல சரீரமாய் நிற்கும். தத் மாத்திரைகள் ஐந்து, அந்தக்கரணங்களுள் மனம், அகங்காரம், புத் தி என மூன்று ஆகஎட்டும் சூக்கும் சரீரமாய் நிற்கும், எட்டுத் தத்துவங்களால் ஆயினமைபற்றிச் சூக்கும் சரீரத்தை புரியட்டக சரீரம்’ என்று வழங்குதலும் உண்டு. அந்தக் கரணங்களுள் சித்தமாய் நிற்கும் குணதத்துவம் ஒன்று, வித்தியா தத்துவங்கள் ஏழு ஆக எட்டு தத்துவங்களும் பர சரீரமாகும். மூலப்பிரகிருதி குண தத்துவத்தின் வேறாகாமை அறிக.