பக்கம்:சைவமும் தமிழும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 255 பர சரீரத்துள் குணதத்துவம் முக்குணமயமாய் ஒற்றலின் குணசரீரம் என்றும். காலம், நியதி முதலிய ஐந்தும் உயிர்களுக்குச் சட்டைபோல அமைதலின் ‘கஞ்சுக சிரம் என்றும், மாயாதத்துவமே ஏனைய தத்துவங் கட்குக் காரணமாதலின் அது காசன சரீரம்" என்றும் வழங்கப்படும். சிவ தத்துவம் ஐந்தும் சகலர் பிரளயா கலர்க்கு உடம்பாய் வருதல் இல்லை. பர சரீரத்தை இங்ங்ணம் மூன்றாக்கி. இவற்றுடன் சூக்கும் துால சரீரங் களையும் கூட்டி, துல சரீரம், சூக்கும சரீரம், குணசரீரம், கஞ்சக சரீரம், காரண சரீரம்’ எனச் சரீரத்தை ஐந்தாகக் கூறுதலும் உண்டு. ஐந்து சரீரங்களும் 'ஐங்கோசங்கள்’ என்றும் வழங்கப்படும். இனி, ஐங்கோசங்கள் இன்னவை என்பதையும் தெரிவிப்பேன். துரலசாரம் சோறும் நீரும் முதலிய உணவினால் நிலை பெறுதலின் அஃது அன்னமய கோசம்' எனப்படும். சூக்கும் சரீரம் பிராண வாயுவின் இயக்கத் தால் செயற்படுதலின் அது பிராணமய கோசம் என வழங்கப் பெறும், குணசரீரம் அந்தக்கரணம் ஒன்றாகிய சித்தமாய் நிற்றலின் அது மனோமய கோசம்’ எனப்படும். கஞ்சுக சரீரம் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை விளக்கி நிற்றலின் அது விஞ்ஞானமய கோசம்' எனப்படும். காரணசரீரம் கேவலத்தில் மூடமாய்க் கிடந்த ஆன்மா விற்குச் சிறிது விழிப்புத் தந்து மயக்கி ஒருவகைக் களிப்பை நல்குதலின் அஃது ஆனந்தமயகோசம் என்றும் நவிலப்படும், இங்ங்ணம் ஐங்கோசங்களையும் அறிந்து கொள்க. இனி, தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்து விகம் எனப்படும். இவற்றின் தொகை அறுபதாகும். இவற்றையும் தத்துவங்களுடன் சேர்த்துப் பொதுவாக 'தொண்ணுற்றாறு தத்துவங்கள்” என்று கூறுவர். இத்தாத்து விகங்கள் இன்னவை என்பதையும் தெளிவாக்குவேன்: பிருதிவியின் கூறு எலும்பு, தசை, மயிர் தோல், நரம்பு என்னும் ஐந்து, அப்புவின் கூறு சிறுநீர், இரத்தம், சிலேத்