பக்கம்:சைவமும் தமிழும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 ೧೮೩ ಆಖಲ விளக்கு துமம், வியர்வை, சுக்கிலம் (அல்லது சோணிதம்) என்னும் ஐந்து, தேயுவின் கூறு இதயத்தில் வெப்பம், பசித்தி, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், பைத் தியம் என்னும் ஐந்து வாயுவின் கூறு உதானன், பிராணன், க்பானன், ! அ மானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன் தனஞ்செயனன் என்னும் வாயுக்கள் பத்து; ஆகாயத் தின் கூறு அத்தி, அலம்புடை. இடை. பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி சிகுவை, புருடன் என்னும் நாடிகள் பத்து, ஞானேந்திரியங்களின் விடயங்கள் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து; கன்மேந்திரியங் களின் விடயங்கள் வசனம், கமனம், தானம், விசர்க்கம். ஆனந்தம் என்னும் ஐந்து, அகங்காரத்தின் கூறு தைசதம்: வைகாரிகம், பூதாதி என்னும் மூன்று; காமம், குரோதம், உஜோயம், மோகம், மதம் எனக் குற்றம் ஐந்து; (மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்) ; குணத்தின் கூறு சாத்துவி கம், இராசதம், தாமதம் என்னும் மூன்று; சூக்குமை, பைசந்தி. மத்திமை, வைகரி என்னும் வாக்கு நான்கு; இவை அனைத் தையும் கூட்ட தாத்துவிகங்கள் அறுபது ஆதலை அறிக. மேலே கூறப் பெற்றவை தத்துவங்களின் கூறுகளாகும். இன்னும் தத்துவங்களின் கூறுகளே தனு, கரணம், புவனம், பேரகம் என்னும் நான்குமாகும். இவற்றுள் புவனம், எனபது எல்லாத் தத்துவங்களிலும் பலவாக உள்ளது. அவை அண்டங்களையும் தன்னு:ள் அடக்கியுள்ளது. இத் துடன் இக்கடிதத்தை நிறைவுசெய்கின்றேன். அன்டன், கார்த்திகேயன்