பக்கம்:சைவமும் தமிழும்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 259 பூமியும் மேற்பரப்பே மக்கள் வாழும் பூலோகம். இஃது ஒன்றை ஒன்று சூழ ஏழு தீவுகளையுடையது. இவை சம்புத் தீவு, சாகத் தீவு, குசத்தீவு, கிரெளஞ்சத்தீவு, சான்மவித் திவு, கோமேதகத் தீவு, புடகரத்தீவு என்பவையாகும். சம்புத்தீவைச் சுற்றி உப்புக்கடல் உள்ளது. இவ்வாறே மற்றைய தீவுகளை முறையே பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், சுத்தநீர்க் கடல் என்னும் கடல்கள் சூழ்ந்துள்ளன. சுத்த நீர்க்கடலைச் சூழ்ந்து பொன்னிலமும் அதனைச் சூழ்ந்து இருள் நிலமும் அதனைச் சூழ்ந்து பெரும் புறக்கடலும் உள்ளன. பூலோகத்தை நிலைபெறுவித்த்ற்கு அதன் நடுவே உருவாணியாய் அமைந்துள்ளது மகாமேரு மலை. இதில் மேல் உலகத்தில் உள்ள இந்திரன் முதலிய திசைக் காவலர் கட்கும் அயன்மால் சீகண்ட உருத்திரர் என்பவர்கட்கும் உரிய இடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக உள்ளன. இந்திரன் தவிர ஏனைய திக்குப்பாலகர்கi&கும் அவரவர் திக்கில் இடங்கள் அமைந்துள்ளன. இவர்கள் தம்தம் இடங்களில் அமர்ந்து தம்தம் அளவிற்கேற்ற அதிகாரங்களை இப் பூவுலகில் செலுத்தி வாழ்வர். சீகண்ட உருத்திரர் வரழும் இடமே எல்லா இடத்திற்கும் மேற்பட்ட இடமாகும். இக் கொடுமுடியே சோதிகட்கம் எனப்படும் கைலாயம்: ஆகும். எனவே, பிரகிருதிக்குமேல் உள்ள சீகண்ட உருத்திர புவனம் மகா கைலாயம் ஆகும். சுத்த மாயா உலகங்கள் சிவலோகம் எனப்படுதலால் சிலபொழுது இவ்வுருத்திர லோகமும் சிவலோகம்’ என்று வழங்கப்பெறும் என்று அறிக. - மேற்குறிப்பிட்ட மகாமேரு மலையின் தென்பால் கிடதம், ஏமகூடம், இமயம் என்ற மூன்று மலைகள் உள்ளன. வடபால நீலம், சுவேதம், சிருங்கவான், என்ற மூன்று மலை கள் உள்ளன. கிழக்கில் மாலியவான் என்னும் மலையும் மேற்கில் கந்தமாதனம்’ என்னும் மலையும் உள்ளன. இந்த்