பக்கம்:சைவமும் தமிழும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.6%) சைவ சம் வினக்கு மலைகன்சல் நாவலந்திவு ஒன்பது கண்டங்களாகப் பகுக்கப் படுகின்றது. அவை இளாவிருத்தவருடம், பத்திராசுகவருடம், கேதுமால்வருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம், இரம்மிய வருடம், இரணியவருடம், குருவருடம் என்பனவாகும். இவற்றுள் நாம் வாழும் பாரத வருடம் என்னும் ೬ உட்பட ஒன்பது கண்டங்களையும் மனு’ என்னும் அரசன் மக்கள் ஒன்பதின்மர்க்கு உரிய வாய் அவர்கள் பெயரால் வழங்கப் பெற்றன. தாம் வாழும் பரதகண்டமும் ஒன்பது கண்டங்களை யுடையது. இவற்றுள் தென்கடலைச் சார்ந்த பகுதி குமரிக்கண்டம் என்று வழங்கப்பெறுகின்றது. பூலோகத் தில் பரதகண்டமே சிறந்தது என்றும், பரதகண்டத்தி லும் குமரிக்கண்டமே சிறந்த தெய்வ பூமி என்றும் சிவாக மங்கள் கூறுகின்றன. மேற்குறிப்பிட்ட பூலோகத்தின்மேல் புவலோகம், சுவ லே:கம், மகலோகம், கனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்னும் ஆறு உலகங்கள் உள்ளன. புவலோகம் சந்திரா இத்தர் முதலியோர் வாழ்வது. கவலோகம் இந்திரன் முதலிய தேவர்கள் வதிவது. மகலோகம் மரீசி முதலிய முனிவர்கள் இருப்பது. சனலோகம் பிதிரர்கள் முதலியோர் தங்கி வாழ்வது. தவலோகம் சனகர் முதலிய பெருந்தவத் தோர் வாழ்வது. சத்தியலோகம் நான்முகனுக்குரியது. இதற்குமேல் திருமாலினது வைகுந்தமும், இதற்குமேல் குனருத்திரருக்கு உரிய உருத்திரலோகமும் உள்ளன. பிருதிவி தத்துவத்தில் உள்ள எல்லாக்ண்டங்களிலும் இவ் வாறே உலகங்கள் உள்ளன, இவ்வண்ட்கிகளில் திசைக்குப் பத்தாகப் பத்துத் திசையிலும் நூறு உருத்திரபுவனமும், அண்டத்தின் உள்ளே கீழ் மூன்றும்,மேல் மூன்றும், அண்டத் தின்மேலே இரண்டும் ஆகப்புவனங்கள் நூற்றெட்டு ஒவ் வோர் அண்டத்திலும் அமைந்துள்ளன. பிருதிவிக்கு மேலே உள்ள தத்துவங்களிலும் இவ்வாறே புவனங்கள் உள்ளன். தத்துவங்கள் புவனங்கள் என்பவற்துடன் வேறு உள்ள