பக்கம்:சைவமும் தமிழும்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக இயல் 露響鬍 மாயா காரியங்களைக் கூட்டி அனைத்தும் அத்துவாக்கள்’ என்று வழங்கப்பெறும். - இனி, அதி துவாக்களை விளக்குவேன். இதற்கு முன்னர் இதுகாறும் குறிப்பிட்ட சில செய்திகளை நினைவு கூர்தல் வேண்டும். மாயையின் காரியங்களாகிய உலகம் சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இருவகைப்படும் என்பதையும், சொற்பிரபஞ்சத்தில் குக்குமை வாக்கு, பைசந்தி வாக்கு, மத்திமை வாக்கு. வைகரி வாக்கு என்ற நால்வகை வாக்குகள் அடங்கியுள்ளன என்பதையும் முன்னர்க் குறிப்பிட்டதை ஈண்டு நினைவுகூர் க. நால் வகை வாக்குகள் மந்திரம், பதம், வன்னம் என மூன்றாகச் சொல்லப்படும். மந்திரம் ?ன்பது சொற்றொடர், பதம் என்பது சொல். வன்னம் என்பது எழுத்து. இவையனைத் தும் சுத்தமாயையின் காரியங்களே. இனி, இவண் சொல் லப்பெற்ற தத்துவங்களும் புவனங்களும் பொருளுலகம் , இவை சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் இருமாயையி லும் உண்டு. - சுத்தமாயையின் கலை என்ற பொருட் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி விருத்தியாய்த் தோன்றும். இவை பிரகிருதி யில் உள்ள பஞ்சபூதங்கள் போலச் சுத்தமாயையில் நின்று எல்லாப் பொருள்களையும் அடக்கி நிற்கும், பஞ்ச பூதங் கட்குச் சொல்லப்பட்ட பிடிவு, நிறம், குறி, எழுத்து, அதி தேவர் என்பன இதற்கும் பொருந்தும். பஞ்ச கலைகள் கிவிர்த்தி, பிரதிட்டை வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்பன வாகும். இஃது ஒடுக்க முறை. இவை எல்லாவற்றிலும் மேல் நிற்பது சாந்தியதீதை என்பதும், எல்லாவற்றிலும் கீழ் நிற்பது கிவிர்த்தி என்பதும் தெளிவு. எனவே, இவை முறையே பிருதிவி, அப்பு, தேயு, வாயு. ஆகாயம் என்பன போன்றனவாகும். நிவிர்த்தி முதலிய பெயர்களைப் பெற்று நிற்பது சிவனது சக்தியே. அதற்கு இடமாதல் பற்றிக் கலைகளும் அப்பெயர் பெற்றன. மந்திரம், பதம் லுன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறும்ே அத்து,