பக்கம்:சைவமும் தமிழும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 競63 களில் இறுதியிலுள்ள இருபத்தெட்டு:எழுத்துகளில் இன்னம்}. இறுதி யெழுத்தாகிய கூடிகாரம் இன்க் மந்திரங்களில் இருதயம், சத்தியோ சாதம் என்னும் இரண்டும்,புவனங்களில் நூற்றெட்டும் இக்கலையில் அடங்கி நிற்கும். இக்கலைக் குரிய வாக்கு துலவைகரி. இது பிறர் செவிக்குக் கேட்ப தாகும். பிரதிட்டாகலை : பிருதி விக்கு மேல் உள்ள இருபத்து, மூன்று தத்துவங்கள் இதில் அடங்கும். பதங்களுள் மேற் கூறியவற்றிற்கு மேலுள்ள இருபத்தொரு பதங்களும், எழுத்துகளில் முன் நுதலியதற்கு மேலுள்ள (ஒடுக்க முறை யில் ளகார முதல் டகாரம் ஈறாக) இருபத்து நான்கும் சிரம், வாமதேவம் என்ற மந்திரங்களும்,புவனம் ஐம்பத்தாறும் இதில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு சூக்குமவைகரி. இது தன் செவிகட்கு மட்டிலும் கேட்கும். வித்தியாகலை வித்தியாதத்துவம் ஏழும் இக் கலை யுள் அடங்கும். மேற்கூறியவற்றிற்கு மேலுள்ள இருபது பதங்களும் ஏகாரம் முதல் கங்வருக்கத்தின் நான்காவது எழுத்து ஈறாகவுள்ள ஏழு எழுத்துகளும் சிகை, அகோரம், என்ற இரண்டு:மந்திரங்களும், புவனம் இருபத்தேழும் இதில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு மத்திமை ஆகும். சாந்திகலை : சிவ தத்துவம் ஐந்தில் சுத்தவித்தை. ஈசுரம், சாதாக்கியம் என்ற மூன்றும் இதில் அடங்கி நிற்கும். மேற்கூறியவற்றிற்கு மேலுள்ள பதினொரு பதங்களும், சவ்வருக்கத்தில் நான்காவது, தவிர ஏனைய மூன்று வன்னங்களும், தத்புருடம், கவசம் என்ற இரண்டு மந்திரங் களும் இதில அடங்கும். இக்கலைக்குரிய வாக்கு பைசக்தி. - சாந்தியத்தகலை : சிவதத்துவத்தில் எஞ்சிய சக்தி சிவம் என்ற இரண்டு தத்துவங்கள் இதில் அடங்கும். மேற் சொல்லிய பதங்கள் போக் எஞ்சிய ஓம்’ என்னும் ஒரு பதமும், ஐம்பத்தொரு வன்னங்களில் மேற்சொல்லியவை போக எஞ்சிய உயிரெழுத்து பதினாறும், ஈசானம், அத்திரம்