பக்கம்:சைவமும் தமிழும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 魏兹? வைத்துச் கொண்டு, அதனை அகாரம், உகாரம், மகாரம், விந்து, காதம் என்று ஐந்து கூறுகளாக்கி அக்கூறுகளை, வியட்டிப் பிரணவம் எனக் கூறும் மரபும் உண்டு. இக் கூறுகள்தாம் பிரணவ கலைகள்’ என்று வழங்கப்பெறு கின்றன. இந்த ஐங்கறுகளும் ஐந்து அக்கரம் (அக்கரம்அட்சரம்-எழுதிது) என வழங்கப்பெறும். இந்த அக் கரங்கள் காரணமாகவே உள்ளத்தில் உணர்வுகள் உண்டா இன்றன. இதனைத் தெளிவாக்குவேன். அகாரம் அகங் கார்த்தை இயக்கும். உகாரம் புத்தியை இயக்கும். 'விந்து சித்தத்தை இயக்கும். நாதம் புருடனை இயக்கும். இவற்றால் இங்ஙனம் அந்தக்கரணங்கள் செயற்படுத லாலே உணர்வுகள் தோன்றியும் மறைந்தும் வரும் என்பதைத் தெளிக. இவற்றுள் அகாரத்தை நான்முகனும், உகாரத்தைத் திருமாலும், மகாரத்தை உருத்திரனும், விந்துவை மகேசுரனும், நாதத்தைச் சதாசிவனும் செயற் படுத்தி நிற்பர் என்பதையும் அறிவாயாக. - இன்னும் ஒரு கருத்தையும் ஈண்டுத் தெரிந்து கொள்ளல் வேண்டும். பிரணவ கலைகளாகக் கூறப் பெறும் அகாரம் முதலியன தூல:சூக்குமங்களது குறியீ.ா கும். இதனையும் விளக்குவேன். அஃதாவது,"அகாரமும், உகாரமும் மிகவும் துரவம். எனவே, அவை வைகரி வாக்கைக் குறிப்பனவாகும். மகாரம், தூலம். ஆகவே அது மத்திமை வாக்கைக் குறிக்கும். விந்து, சூக்குமம். எனவே, அது பைசந்தி வாக்கைக் குறிக்கும். நாதம், அதி குக்குமம். எனவே, அது சூக்குமை வாக்கைக் குறிக்கும். அக்கரங் களை இயக்குதல் என்பது இவ்வாக்குகளை இயக்குவதே யாகும். வைகரி வாக்கும் மத்திமை வாக்கும் பிராணன் உதானன் என்னும் காற்றுகளின் சார்புடையனவாதலின், அவற்றைக் குண்மூர்த்திகள் செலுத்துதல் கூடும் என் பதனையும் அறிந்து தெளிக. - உயிர் சாக்கிரம் முதலிய கீழாலவத்தை ஐந்தனையும் அடையும் பொழுது, சொப்பனத்தில் வுைகரி வாக்கு