பக்கம்:சைவமும் தமிழும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சைவ சமய விளக்கு இல்லை. சுழுத்தியில் வைகரி, மத்திமை என்ற இரண்டு வாக்குகளும் இல்லை. துரியத்தில் சூக்குமை வாக்கே உள்ளது. துரியா தீதத்தில் அஃது அதி சூக்குமமாய் திற்கும். இப்பிரணவகலைகள் இன்னும் பன்னிரண்டாகவும், பதினாறாகவும் பகுத்து பிராசாதம் என வைத்து யோக முறையில் தியானிக்கப்படும். எனவே, இவ்வாக்குகளின் வழியே கன்மத்துக்கீடான எண்ணங்கள் அந்தக்கரணங் களில் தோன்றி வினைகளை நுகர்தலும் ஈட்டுதலும் உண்டாக்கும். பின்னர் அவ்வினைகளுக்கேற்றவாறு நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்களில் மேலும் கீழுமாக மாறி மாறிப் பிறந்து இறந்து வரும் நிலை உண்டாகும். - பிறப்பு இறப்புகள் : முன்னொரு கடிதத்தில் ஐங்கோ சங்களைப்பற்றிக் குறிப்பிட்டேனல்லவா? ஐங்கோசங் களில் அன்னமய கோசமாகிய துரல. சரீரம் நீங்குவதே "இறத்தல்' என்பதாகும். ஏனைய நாற்கோசங்களாகிய சூக்கும சரீரமும் பர சரீரமும், முத்தியெய்துங்காறும் நீங்காது நின்று முத்திக் காலத்தே நீங்குவனவாகும். ஆகவே, ஒரு துால சரீரம் நீங்கிய பின்னர்ச் சூக்கும சரீரத் தில் நின்று அடுத்த பிறப்பாகிய தூல சரீரம் தோன்றும். அங்ஙனம் தோன்றுமிடத்துப் பூலோக சரீரம் பெளதிக சரீர மாகும். பூலோகத்திற்கு மேல் உள்ள உலக சரீரங்கள் எல்லாம் பூதசார சரீரமாகும். அவ்வுடம்பும் உலகங்களும் புண்ணியம் உடையார்க்கு உரியனவாகும். நரகலோகத் திற்கு உள்ள சரீரம் யாதனா சரீரமாகும். பூலோகத்து உயிர்களைத் துல சரீரத்தினின்றும் பிரித்துச் சுவர்க்கம். நரகம், பூமி என்பவற்றிற் செலுத்துபவனே தென்றிசைக் கடவுளாகிய கூற்றுவன் ஆவான் என்பதையும் அறிக. புண்ணிய பாவங்கள் அநுபவித்துத் தொலைந்தால் அத்துால சரீரங்கள் நீங்கும். நீங்கவே, அடுத்த வின்னக் இந்த இயல் கடிதம்- பக்.254