பக்கம்:சைவமும் தமிழும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 26懿 குரிய தூல சரீரம் பின் குக்கும சரீரத்தினின்றும் தோன் றும். உயிர்கட்கு இங்ங்னம் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் என்பதை நாள்தோறும் நிகழும் கனவு முதலிய அவத்தைகளிலிருந்து நன்குணரலாம். இதற்காகவே திருவள்ளுவர் பெருமானும், உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. என்ற அரியதொரு மணிமொழியை அருளிச் செய்தார். சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஆணவத்தோடும் கன்மதிதோடும் விரவாத நிலையும் விரவிய நிலையும் என்பனவன்றிப் பொருளால் வேறல்ல. ஆகவே, அவ்விரு மலங்களும் நீங்கிய காலத்தில் சகலர்க்கு உள்ள சூக்கும் சரீரங்களும் பர சரீரங்களும் துய சரீரங்களாய் மாயே யமும் வைந்தவங்களுமாகிய துரா சரீரங்களைத் தோற்று விக்கும். இதனால் அவர்கட்கு உருத்திரராயும் சிலராயும் வாழும் நிலையும் கைக்கூடும் என்பதை அறிக. மும்மலங் களும் வாசனையும் இன்றிப் பற்றறக் கழிந்தவுடன், பரம சிவனுடன் இரண்டறக் கலத்தலாகிய பெருமுத்திப் பயன் உண்டாவதாகும் என்பதையும் அறிந்து தெளிக பாசங்களில் ஆணவமும், கன்மமும் நுண்பொருள் களாய்ப் புலப்படாது நிற்றலின், அவற்றின் நிலைகளை மாயையாகிய பருப்பொருளில் வைத்தே உணர்தல் வேண்டும். அதுபற்றியே தத்துவங்களின் இயல்பு இவ்வாறு விரித்துக் கூறப்பெறுகின்றது. விரிந்த நூல்களில் இதனை இன்னும் மிக விரிவாகக் காணலாம். -- பாச இயலைப்பற்றி விரிவாக, அறியும் நீ இன்னொரு முக்கிய குறிப்பையும் ஈண்டு நினைவிற் கொள்ளல் வேண்டும். மும்மலங்கள்பற்றிய கருத்தினை நன்கு 77. குறள்-ச39