பக்கம்:சைவமும் தமிழும்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்ச் இயல் 27 அறிக. எனவே, திரேந்தர்ன சத்தியும் அருளேயாயினும், அது மறக்கருணையாய்க் கொடுமை போலத் தோன்று தவின், அதனை “அருட்சத்தி’ என வழங்காது. திரோதான சத்தி’ என்றும், திரோதான மலம்’ என்றும் வழங்குவர். மலங்களின் சத்தி மெலிந்து, உயிர்கள் பக்குவநிலையை அடையும்பொழுது இத் திரோதான சத்தியே தனது மறுதலைச் செயவிளிைன்றும் நீங்கி அருட் சக்தியாக மாறி, ஆன்மாவில் பதியும். இதுவே சத்தி கிபாதம் என வழங்கும், திரோதான மலத்தின் இயல்புகளை, பாகமாம் வகைகின்று திரோதான சக்தி பண்ணுதலால் மலம்ஏனவும் கவர்; இதுபரித்து நாகமா நதிமதியம் பொதிசடையான் அடிகள் கணுகும்வகை கருணைமிக கயக்குக் தானே." எனவும். - முற்-சினமருவு திரோதாயி கருணை யாகித் திருந்தியசத் திணிபாதம் திகழு மன்றே எனவும் விளக்குவர் கொன்றவன் குடி உமாபதி தேவ நாயனார். மலங்களுள் ஆணவமலமே முதலாவது என்பதை அறிவாய். அஃது உயிர்க்குச் செம்பிற்குக் களிம்பு போல இயற்கைக் குற்றமாய், உயிர் என்று உண்டோ அதனோடு உளதாயிற்று என்பதும் உனக்குத் தெரியும், நோய் போல உள்ள ஆணவமலம் உயிர்கட்கு இயற்கையாய் இருப்பு தால் அதற்கு மருந்துபோல் உள்ள கன்மமாயைகளும் அவ்வாணவ மலங் காரணமாக உயிர்கட்கு அன்றே உளவாயின. இஃது, அரிசி என்று உண்டோ அன்றே. அதற்கு உமியும். தவிடும், முளையும் இருத்தல்போன்றது என்று விளக்குவர் சித்தாந்த ஆசிரியர்கள். ------ 75. சிவப்பிரகாசம்-20 79. டிெ-48