பக்கம்:சைவமும் தமிழும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் . 273 மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றன்." என்று மூன்று மலங்களைக் காட்டிய மணிவாசகப் பெருமானே, மலங்களைக் தாற்கழல் வன்றவி ரிற்பொரு மத்துறவே" என்று ஐந்து மலங்களையும் காட்டிச் செல்வதையும் காண லாம். திருமூலரும். ... . சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகார்; சித்தர்; முத் தாங்தத்து வர் ழ்வார்." என்று கூறுவதையும் காணலாம். - மேற்காட்டிய சித்தியாரில் (2.86) முளை, தவிடு. உமி என்ற உவமைகள் முறையே கன்மம், மாயை, ஆணவம் என்பவற்றிற்கு உரியனவாகும். இங்ங்ணமே போகம், பந்தம், போத்திருத்துவம் என்றவற்றையும் அவ்வாறே நிரல் நிரையாக கன்மம் போகத்தையும், மாயை பந்தத்தை யும், ஆணவம் வோதத் திருத்துவத்தையும் பண்ணும் என்றே கொள்ளவேண்டும் என்பதையும் கண்டு தெளிக. இனி, கண்டுக் காட்டிய உவமைகளையும் பொருத்திக் காட்டி விளக்குவேன். . முளை என்றது, முளைத்தல் சத்தியைக் கூறியவாறாம். கன்மம் முளைத்தல் சத்திபோல் நின்று போகத்தைப் பண்ணுதலாவது, முளைத்தல் சத்தி முளைக்கு முதற் காரணமாய் நின்று அதனைத் தோற்றுவித்தல் போல, கன்ம மலம் இன்பமும் துன்பமுமாகிய போகத்திற்கு . 83. திருவா. அச்சோபதிகம்-9 84. டிை. தித்தல் விண்ணப்பம்-29 35. திருமந்திரம்-இரண்டாம் தந்திரம்-மூவகைச் சில வர்க்கம்-6 - சை. ச. வி.-18