பக்கம்:சைவமும் தமிழும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சைவ சமய விளக்கு நுகர்ச்சிக்கு-முதற்காரணமாய் நின்று அவற்றை ஆன்ம. அறிவின் கண் தோற்றுவிக்கும் என்பதை அறிக. மாயா மலம் தவிடுபோல் நின்று பந்தத்தைச் செய்தலாவது, தவிடுமுளைத்தற் சத்தி) முளையைத் தோற்றுவித்தற்குத் துணை புரிந்து நிற்பது போல, உயிர் இன்பதுன்பங் களாகிய போகங்களை நுகருமாறு அவற்றுக்குச் சார்பாய் உள்ள தனு, கரண, புவனபோகங்களைத் தந்து உயிரை அவற்றோடு பிணிப்புண்டு நிற்கச் செய்து துணைபுரித லாகும் என்பதை உணர்க. ஆணவமலம் உமிபோல் நின்று போத்திருத்துவத்தைப் பண்ணுதலாவது: உமி (முளைத்தற் சக்தி) முளையைத் தோற்றுவித்திற்கு அச்சத்தியைக் கெடாது காத்து நின்று நிமித்தமாதல் போல, இன்பதுன்பங்களைத் தோற்றுவிக்கின்ற கன்ம மலம் உயிரை விட்டு நீங்காதவாறு விருப்பு வெறுப்பு களால் உயிருக்கு நுகர்வோனாந் தன்மையைக் கொடுத்து அக்கன்மத்தை நிலைநிறுத்தி நிமித்தமாதலாகும். போத் திருத்துவம் என்பது, புசிப்போனாத் தன்மை. இவற்றை முன்னரும் விளக்கியுள்ளேன்." ஆகவே, முளைத்தல் என்னும் செயலுக்கு முளைத்தற் சத்தி முதற் காரணமும், தவிடு துணைக் காரணமும், உமி நிமித்த காரணமுமாதல் போல இன்ப துன்ப அநுபவமாகிய காரிஷத்திற்குக் கன்ம மலம் முதற் காரணமும், மாயா மலம் துணைக்காரணமும், ஆணவ மலம் நிமித்த காரணமு மாதல் தெளிவாகும். இன்னும், நிமித்த காரணம் இல்லாது முதற்காரணமும், துணைக் காரணமும் செயற்படாவாதலின் நிமித்தகாரணமாகிய ஆணவமலம் உள்ள வரையில் பலவகை உலகங்களில், பல வகைப் பிறப்புகளில் பிறந்தும் இறந்தும் இன்பதுன் பங்களை அநுபவிக்கின்ற பந்த நிலை நீங்காது என்பதும், ஆணவமலம் நீங்கும்பொழுது ஏனைய மலங்களும் நீங்க. 86. இயல்-4. கடிதம்-25. பக்கம்-(-194-95)