பக்கம்:சைவமும் தமிழும்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ。 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக, ஆருயிர்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியினை அடை தற்குரிய சாதனத்தின் (வழியின்) இயல்பை விளக்குமாறு கேட்டிருந்தாய். அதுபற்றிய கருத்துகளை இக்கடிதத் திலும் இதனைத் தொடர்ந்து எழுதும் சில கடிதங்களிலும் விளக்குவேன். * - மும்மலங்கட்கு உட்பட்ட உயிர்கள் அம்மலங்களின் சார்பால் பலவகைப் பிறப்புகளை எய்தி பல நுகர்ச்சிப் பொருள்களை அடையும்; இதனால் பல இன்பதுன்பங் களை துகர நேரிடும். மேலும், அந்நுகர்ச்சிக்கு ஏதுவான செயல்களைப் புரியுங்கால் துன்பங்கள் மிகுதியாயும் இன்பம் சிறிதாயும் இருத்தலைப் பலகாலும் உணரும். இந்த உணர்ச்சியின் காரணமாக துன்பம் நீங்குவதற்கும் துன்பங்கலவாத பெரிய இன்பத்தை அடைவதற்கும் வழி இல்லையோ என அவாவி நிற்கும். இங்ங்ணம் அவாவும் நிலையை உயிர்க்குயிராய் நின்று அறியும் இறைவன் உணர்ந்து, அவ்வுயிர்களின் உணர்வு நிலைக்கேற்பச் சிற்சில நெறிகளை இதுவே நன்னெறி, இதுவே நன்னெறி" என உணருமாறு உள்நின்று-அந்தர் யாமி யாக நின்று-உணர்த துவன். இங்கனம் சிலருக்கு உணர்த்தியும் அவர் மூலம் அவரோடு ஒத்த பலருக்கு உணர்த்தவும் செய்வன். இவ் வழியில் தோன்றி நிலவி வருவனவே முதலும் வழியுமாய் மரபுநிலை திரியா மாட்சியினையுடைய மெய்ந்நூல்கள். இம்மெய்த் நூல்களே வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். இவற்றுள் வேதங்கள் பொது நூல் சள்; ஆகவே அவை நன்னெறியைப் பொது வகையாக உணர்த்தி, மெய்ந்நெறி விற்கொண்டு உய்க்கத்தக்க உலகியலில் நிற்பிக்கும. சிவாகமங்கன் சிறப்பு நூல்சள் ஆதலின், அவை நன்